Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், வலிமை, நீதி, ஒற்றுமை ஆகியவற்றை எடுத்துக்காட்டும் விதமாகவும் சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்றைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்


1943-ம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி, போர்ட் பிளேரில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஒப்பற்ற துணிச்சலுடனும் வீரத்துடனும் மூவண்ணக் கொடியை ஏற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை நினைவு கூர்ந்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (30.12.2025) நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

சுதந்திரம் என்பது வெறும் விருப்பத்தால் அடையப்படுவதில்லை என்பதையும் மாறாக வலிமை, கடின உழைப்பு, நீதி, கூட்டுறுதி ஆகியவற்றின் மூலம் அடையப்படுகிறது என்பதையும்வரலாற்றில் இடம்பெற்ற அந்த தருணம், தேசத்திற்கு நினைவூட்டுகிறது என்று பிரதமர் கூறியுள்ளார்.

இந்த உணர்வை வெளிப்படுத்தும் வகையிலான சமஸ்கிருத ஸ்லோகத்தை, சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

***

(Release ID: 2209645)

TV/PLM/KR