Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் பேகம் கலிதா ஜியா மறைவுக்கு பிரதமர் இரங்கல்


பங்களாதேஷ் முன்னாள் பிரதமரும், பங்களாதேஷ் தேசிய கட்சி தலைவருமான பேகம் கலிதா ஜியா டாக்காவில் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி குறிப்பிட்டிருப்பதாவது:

பங்களாதேஷ் முன்னாள் பிரதமரும், பங்காளதேஷ் தேசிய கட்சி தலைவருமான பேகம் கலிதா ஜியா மறைவு செய்தி கவலையளிக்கிறது.

அவருடைய குடும்பத்தினருக்கும், பங்களாதேஷ் மக்கள் அனைவருக்கும் எங்களுடைய ஆழ்ந்த இரங்கல். இறைவன் இந்த துயரமான இழப்பை தாங்கிகொள்வதற்கான சக்தியை அவரது குடும்பத்தினருக்கு அளிக்கட்டும்.

பங்களாதேஷின் முதல் பெண் பிரதமராக அந்நாட்டின் வளர்ச்சிக்கும், இந்தியா பங்களாதேஷ் இடையேயான உறவுக்கும் அவர் ஆற்றிய முக்கிய பங்களிப்புகள் என்றும் நினைவு கூரப்படும்.

2015-ம் ஆண்டு டாக்காவில் அவருடனான எனது சந்திப்பை நான் நினைவு கூர்கிறேன். அவருடைய தொலைநோக்குப் பார்வை, பாரம்பரியம் ஆகியவை நமது கூட்டாண்மைக்கு தொடர்ந்து வழிகாட்டும்.

அவருடய ஆன்மா சாந்தியடையட்டும்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2209642&reg=3&lang=1   

***

TV/IR/RK/KR