Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நேதாஜி தொடர்புடைய முதல் 100 ஆவணங்கள் வெளியிடப்பட்டன. தேசிய ஆவணக்காப்பகத்துக்கு வருகை தந்த பிரதமர், நேதாஜியின் குடும்பத்தினரை சந்தித்தார்.

மத்திய அரசு, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பான 100 ஆவணங்களை இன்று வெளியிட்டது. பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தேசிய ஆவணக் காப்பகத்துக்கு வருகை தந்து, ஆவணங்களை வெளியிடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பேராசிரியர் சித்ரா கோஷ், திரு சந்திர போஸ் மற்றும் திரு சூர்ய குமார் போஸ் ஆகியோர் உள்ளிட்ட நேதாஜியின் குடும்ப உறுப்பினர்களை பிரதமர் சந்தித்தார்.

14 அக்டோபர் 2015 அன்று, நேதாஜியின் குடும்ப உறுப்பினர்களை அவரது இல்லத்தில் சந்தித்த பிரதமர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான ஆவணங்களை மத்திய அரசு படிப்படியாக வெளியிடும் என்று அறிவித்தார்.

இதன்படி, முதல் தொகுதியாக 33 ஆவணங்கள், பிரதமர் அலுவலகத்தால், தேசிய ஆவணக் காப்பகத்திடம் 4 டிசம்பர் 2015 அன்று ஒப்படைக்கப்பட்டன.

இதன் பின்னர், மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், ஆகியவை தங்கள் வசம் இருந்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான கோப்புகளை தேசிய ஆவணக் காப்பகத்திடம் ஒப்படைத்தன.

முதல்படியாக, தேசிய ஆவணக்காப்பகம், நேதாஜி தொடர்பான 100 ஆவணங்களை டிஜிட்டல்மயமாக்கி, பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு, பொதுமக்களுக்காக வெளியிட்டது. பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு, இதர ஆவணங்களும், பொதுமக்களுக்காக வெளியிடப்படும்.

வெளிநாடுகள் பலவற்றிற்கு, மத்திய அரசு நேதாஜி தொடர்பான ஆவணங்களை வெளியிடுமாறு கேட்டுக் கொண்டு கடிதம் எழுதியுள்ளது. மத்தி அரசு தொடர்ந்து அந்நாடுகளிடம் இது தொடர்பாக வலியுறுத்தும்.

டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட நேதாஜி ஆவணங்கள், இதற்கென என்.ஐ.சி.யால் உருவாக்கப்பட்ட www.netajipapers.gov.in என்ற இணையதளத்தில் கிடைக்கும்

***