பி.எம்.இந்தியா
நேபாளத்தின் ராஷ்ட்ரிய ஸ்வதந்திரா கட்சித் தலைவர் திரு ரபி லாமிச்சனே இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.
இச்சந்திப்பு குறித்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள பிரதமர், ஒரு பகிரப்பட்ட வளமான எதிர்காலத்திற்காக நெருக்கமுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற லாமிச்சனேனின் விருப்பத்தை வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையின் கீழ், நேபாளம் முன்னுரிமை கூட்டாண்மை நாடாக உள்ளது என்று திரு மோடி கூறியுள்ளார். இருநாடுகளுக்கும் இடையேயான சிறப்பு வாய்ந்த, பலதரப்பட்ட நட்புறவை மேலும் புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல புதிய அரசுடன் இணைந்து செயல்பட இந்தியா ஆவலுடன் இருப்பதாக பிரதமர் உறுதிபூண்டுள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர், “நேபாளத்தின் ராஷ்ட்ரிய ஸ்வதந்திரா கட்சித் தலைவர் திரு ரபி லாமிச்சனே சந்தித்தது மகிழ்ச்சியளிக்கிறது. பகிரப்பட்ட வளமான எதிர்காலத்திற்காக நெருக்கமுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற லாமிச்சனேனின் விருப்பத்தை நான் வரவேற்கிறேன்.
அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையின் கீழ், நேபாளம் முன்னுரிமை கூட்டாண்மை நாடாக உள்ளது. இருநாடுகளுக்கும் இடையேயான சிறப்பு வாய்ந்த, பலதரப்பட்ட நட்புறவை மேலும் புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல புதிய அரசுடன் இணைந்து செயல்படுவதை நாம் எதிர்நோக்கியுள்ளோம்.”
***
(Release ID: 2268328)
SS/IR/RJ/SH
Delighted to meet the Chairman of the Rastriya Swatantra Party of Nepal Mr. Rabi Lamichhane. I welcome and fully share his desire to work closely together for a shared and prosperous future.
— Narendra Modi (@narendramodi) June 3, 2026
Nepal is a priority partner under our Neighbourhood First policy and we look forward to… pic.twitter.com/ZMjpGthKTX
नेपालको राष्ट्रिय स्वतन्त्र पार्टीका सभापति श्री रवि लामिछानेज्यूसँग भेट्न पाउँदा अत्यन्तै खुशी लागेको छ । एक साझा र समृद्ध भविष्यका लागि मिलेर काम गर्ने वहाँको चाहनालाई म स्वागत गर्दछु र त्यसमा पूर्ण रुपमा सहमत छु ।
— Narendra Modi (@narendramodi) June 3, 2026
हाम्रो छिमेकी पहिलो नीति अन्तर्गत नेपाल प्राथमिकतामा रहेको… pic.twitter.com/5xNRbyQKTX