Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நேபாள முன்னாள் பிரதமர் திரு.புஷ்ப கமல் தாஹல் “பிரச்சந்தா” பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்திப்பு

நேபாள முன்னாள் பிரதமர் திரு.புஷ்ப கமல் தாஹல் “பிரச்சந்தா” பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்திப்பு


நேபாள முன்னாள் பிரதமரும், நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் இணைத் தலைவருமான திரு.புஷ்ப கமல் தாஹல் “பிரச்சந்தா” இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்தார்.

இரு தலைவர்களும் இந்தியா-நேபாள் உறவுகளின் முன்னேற்றம் மற்றும் பரஸ்பர அக்கறையுள்ள இதர விஷயங்கள் குறித்து விவாதித்தனர்.

தங்களுக்கு இடையேயான முந்தைய கலந்துரையாடல்களை அன்புடன் நினைவுக் கூர்ந்த பிரதமர் திரு. மோடி, இந்தியா-நேபாள் உறவுகளை வலுப்படுத்த திரு. தாஹல் ஆற்றிய மதிப்பு மிக்க பங்குப் பணிக்கு நன்றித் தெரிவித்துக் கொண்டார்.
இந்த ஆண்டு நேபாளத்தில் தாம் மேற்கொண்ட இரண்டு பயணங்களை நினைவுக் கூர்ந்த பிரதமர், இந்தியா-நேபாள் உறவுகள் அடிக்கடி நடைபெறும் உயர்நிலை பேச்சுக்கள் மூலம் வலுப்பெற்று வருவதாக கூறினார்.

***