Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பசு சேவகர்கள் என்ற பெயரில் தான்தோன்றித்தனமாக செயல்படுகின்றவர்களுக்கு பிரதமர் கண்டனம். பசு சேவகர்கள் வேடத்தில் குற்றச்செயல் புரிகின்றவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தல்.


‘மை கவ்(எனது அரசு)’ இணைய இயக்குதளம் துவங்கி இரண்டாண்டுகள் ஆனதையொட்டி பிரதமர் ஆற்றிய தனித்தன்மைவாய்ந்த டவுன்ஹால் உரையாடல்.

பசு சேவகர்கள் என்ற போர்வையில் பசுக்களை காப்பதை வியாபாரமாக செய்துவரும் ஆட்களுக்கு எதிராக பிரதமர் மோடி தனது கடும் கண்டனத்தை பதிவு செய்ததோடு, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.. மக்களும் அரசில் பங்குபெறும் வண்ணம் மத்திய அரசு பிரத்யேகமாக அமைத்துள்ள மை கவ் (‘எனது அரசு’) இணைய இயக்குதள துவங்கி இரண்டு ஆண்டுகள் ஆனதையொட்டி உரையாற்றிய பிரதமர் பசுசேவகர்கள் போர்வையில் உலாவரும் ஆட்களின் பட்டியலை தயாரிக்கும்படி மாநில அரசுகளை கேட்டுக்கொண்டார். பிளாஸ்டிக் கழிவுகளை உண்பதால் உயிரிழக்கும் பசுக்கள் குறித்து கவலை தெரிவித்த பிரதமர், உண்மையிலேயே பசுக்களின்மேல் அக்கறை கொண்டவர்கள் அவை பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணாதவாறு உறுதிசெய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

சிறந்த நிர்வாகம், வெளியுறவுக் கொள்கை, பங்கேற்பு ஜனநாயகம் என பல தலைப்புகளில் வந்த கேள்விகளுக்கும் பிரதமர் பதிலளித்தார்.

ஒரு குடிமகன் ஓட்டுப்போடுவதோடு தன் கடமை முடிந்துவிட்டதாக நினைத்தால் ஜனநாயகத்தின் கடமை முழுமை பெறாது என குறிப்பிட்ட பிரதமர், பங்கேற்பு ஜனநாயகம் என்பது அத்தியாவசியம் என்றார். எந்த திட்டமும் கடைசி வீடு வரை சென்று சேருவது என்பது திட்டங்களை வகுப்பது எவ்வளவு தேவையோ அவ்வளவு தேவை என்றும், பலன்கள் உரியவர்களுக்கு சரியான முறையில் போய்சேர வேண்டும் எனவும் பேசினார். நல்ல நிர்வாகத்தில் தேவையற்ற அமைப்புகள் எதுவும் இருக்காது எனவும், ஜனநாயகத்தின் பெரிய பலமே குறைதீர்ப்பு மையங்கள்தான் என்றும் தெரிவித்தார்.

பொருளாதாரத்துக்கு வலுசேர்க்க ஒரு துறையால் முடியும் என்றால் அது விவசாயத்துறைதான் என பிரதமர் மோடி தெரிவித்தார். ருர்பன் திட்டத்தைப் பற்றி தெரிவிக்கும்போது கிராமங்களின் ஆன்மாவை காக்கும் அதே சமயம் அனைத்து நவீன முன்னேற்றங்களையும் கிராமங்களுக்கும் கொண்டு சேர்ப்பதே தன் லட்சியம் என்றும் கூறினார்.

கைத்தறித்துறை பற்றி பேசும்போது, “நேஷனுக்காக காதி, ஃபேஷனுக்காகவும் காதி,” என்ற கொள்கை மக்களை வழிநடத்தும் என்றார்.

வெளியுறவுக் கொள்கைகளைப் பொறுத்தவரை, “முதலில் இந்தியா,” என்ற தனது கொள்கையே அடித்தளம் என்றார். பிற நாடுகளுடனான இந்தியாவின் பேச்சுவார்த்தைகளில் புலம்பெயர் இந்தியர்களின் பங்கு மகத்தானது என்றும் பிரதமர் தெரிவித்தார்.

சுகாதாரத்துறை, சுற்றுலாத்துறை போன்ற பல விஷயங்களையும் தொட்டுச் சென்ற பிரதமரின் பேச்சு 100நிமிடங்கள் வரை நீடித்தது.

நிகழ்ச்சி துவங்கும் முன், மன் கீ பாத் வானொலி நிகழ்ச்சி மற்றும் எனது அரசு இணைய இயக்குதளத்தில் பங்காற்றியவர்களுடன் மேடையில் பிரதமர் உரையாடினார்.

பிரதமர் அலுவகத்திற்காக புதிய செயலியை(APP) அறிமுகப்படுத்திய பிரதமர், செயலியை வடிவமைத்த இளைஞர்களை சந்தித்தார்.

****