Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பத்தான்கோட் தாக்குதலுக்கு பிரதமர் கண்டனம்


பத்தான்கோட்டில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நாட்டின் வளர்ச்சியை சகிக்க முடியாத மனிதநேயத்துக்கு எதிரானவர்கள் இந்திய ஆயுத படையினை தாக்க முற்பட்டுள்ளனர். இந்த பயங்கரவாதத்தை வெற்றிகரமாக எதிர்த்து வென்ற ஆயுத படைக்கு நன்றி தெரிவித்த பிரதமர் இந்த எதிர்த்தாக்குதலில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

மைசூரில் உள்ள மகாராஜா கல்லூரியில் நடந்த சத்குரு டாக்டர். ஸ்ரீ சிவராத்திரி ராஜேந்திர மஹாசுவாமிஜியின் நூற்றாண்டு கொண்டாட்ட துவக்க விழாவில் பேசியபோது பிரதமர் தனது கண்டனத்தை தெரிவித்தார்.

***