Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பத்தான்கோட் தாக்குதலுக்கு பிரதமர் கண்டனம். “இந்தியாவுக்கு எதிரான எதிரிகளின் தீய திட்டம் ஒரு போதும் வெற்றிபெறாது”.

<b>பத்தான்கோட் தாக்குதலுக்கு பிரதமர் கண்டனம்.   “இந்தியாவுக்கு எதிரான எதிரிகளின் தீய திட்டம் ஒரு போதும் வெற்றிபெறாது”. </b

<b>பத்தான்கோட் தாக்குதலுக்கு பிரதமர் கண்டனம்.   “இந்தியாவுக்கு எதிரான எதிரிகளின் தீய திட்டம் ஒரு போதும் வெற்றிபெறாது”. </b

<b>பத்தான்கோட் தாக்குதலுக்கு பிரதமர் கண்டனம்.   “இந்தியாவுக்கு எதிரான எதிரிகளின் தீய திட்டம் ஒரு போதும் வெற்றிபெறாது”. </b

<b>பத்தான்கோட் தாக்குதலுக்கு பிரதமர் கண்டனம்.   “இந்தியாவுக்கு எதிரான எதிரிகளின் தீய திட்டம் ஒரு போதும் வெற்றிபெறாது”. </b


பத்தான்கோட் தாக்குதலுக்கு தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்த பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், இந்தியா வெற்றி பெறுவதை விரும்பாத மனிதகுலத்தின் எதிரிகள், இந்திய ஆயுதப் படைகளின் மீது தாக்குதல் தொடுத்துள்ளார்கள் என்றார். எதிரிகளின் திட்டத்தை முறியடித்த ராணுவப் படைகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த பிரதமர், அந்த தாக்குதலின்போது உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். ராணுவ வீரர்கள் மற்றும் பாதுகாப்புப் படைகள் குறித்து பெருமிதம் கொள்வதாக பிரதமர் தெரிவித்தார். இந்த எதிரிகளுக்கு எதிராக தேசம் ஒன்றுபட்டு நிற்பதாக தெரிவித்த பிரதமர், அவர்களின் திட்டங்கள் ஒருபோதும் வெற்றி பெறாது என்று தெரிவித்தார். மைசூரின், மகாராஜா கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற, தவத்திரு ஜகத்குரு டாக்டர் ஸ்ரீ சிவராத்ரி ராஜேந்திர மகாஸ்வாமிகளின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களை தொடங்கி வைத்து, பிரதமர் உரையாற்றினார்.

முன்னதாக, பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் மைசூர் வந்தடைந்தார். மைசூர் விமான நிலையத்தில் பிரதமரை, மாநில ஆளுனர் திரு வாஜுபாய் வாலா, கர்நாடக முதல்வர் திரு சித்தாராமையா ஆகியோர் வரவேற்றனர்.

அவதூத தத்தா பீடத்துக்கு வருகை தந்த பிரதமர், தவத்திரு ஸ்ரீ கணபதி சச்சிதானந்த ஸ்வாமிகள் அவர்களை சந்தித்தார். தத்தா கோவிலுக்கு வருகை தந்த பிரதமர் கவுரவிக்கப்பட்டார். அந்த கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், இந்தியாவின் நலனுக்காக, துறவிகளும், மகான்களும் ஆற்றும் பணிகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை என்று தெரிவித்தார். அவதூத தத்தா பீடம் செய்து வரும் நற்பணிகளை பிரதமர் பாராட்டினார். விழாவில் கர்நாடக மாநில ஆளுநர் திரு வாஜுபாய் வாலா அவர்கள் கலந்து கொண்டார்.

மைசூர், மகாராஜா கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற தவத்திரு ஜகத்குரு டாக்டர் ஸ்ரீ சிவராத்ரி ராஜேந்திர மகாஸ்வாமிகளின் பிறந்தநாள் நூற்றாண்டு கொண்டாட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியை குறிக்கும் விதமாக அறிவுசார் மையம் கட்டுவதற்கான அடிக்கல்லை பிரதமர் நாட்டினார். அந்த கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், பசவேஷ்வர மகான், பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே சமூக மாற்றத்திற்கான பாதையை அடையாளம் காட்டினார் என்று பிரதமர் குறிப்பிட்டார். லண்டன் மாநகரில், மகான் பசவேஷ்வராவின் சிலை ஒன்றை திறந்து வைக்கும் பேறினை பெற்றதாக பிரதமர் குறிப்பிட்டார். சமூக தீமைகளை எதிர்த்துப் போராடுவதற்காக, ஒவ்வொரு காலகட்டத்திலும், இந்திய சமுதாயத்தில் மகான்கள் தோன்றிக் கொண்டே இருந்தனர் என்ற காரணத்தினாலேயே, இந்தியா ஒரு பிரத்யேகமான நாடு என்றார் பிரதமர். 18 மற்றும் 19ம் நூற்றாண்டில் தோன்றிய சமூக மாற்றத்துக்கான இயக்கங்களே, 20ம் நூற்றாண்டில், சுதந்திர போராட்ட இயக்கத்துக்கான அடித்தளமாக இருந்தன என்றார் பிரதமர்.

21ம் நூற்றாண்டு அறிவின் நூற்றாண்டு என்றும், அறிவு மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் மீது கவனம் செலுத்தும் இந்தியா இந்த நூற்றாண்டில் உலகத்துக்கே வழிகாட்டியாக இருக்கும் என்றார். அறிவுசார் மையத்தை தொடங்கி வைத்ததற்காக, ஜகத்குரு டாக்டர் ஸ்ரீ சிவராத்ரி ராஜேந்திர மகாஸ்வாமிகளுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.

சமீபத்தில பாரீசில் நடந்து முடிந்த காப் 21 மாநாட்டில், இந்தியா, “புதிய கண்டுபிடிப்புகள்” மற்றும் “சர்வதேச சூரிய ஒளிக் கூட்டணி” ஆகியவற்றை உருவாக்குவதில் முன்னோடியாக திகழ்ந்தது என்று பிரதமர் குறிப்பிட்டார்.
கர்நாடக மாநில ஆளுனர் திரு வாஜுபாய் வாலா, கர்நாடக மாநில முதல்வர் திரு சித்தாராமைய்யா, மத்திய அமைச்சர்கள் திரு அனந்த குமார் மற்றும் திரு டி.வி. சதானந்த கவுடா ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.