பி.எம்.இந்தியா
பஞ்சாப் மாநிலம் பத்திண்டாவில் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகமான எய்ம்சை நிறுவுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரியின் ஸ்வாஸ்தய சுரக்ஷா யோஜனா (பி.எம்.எஸ்.எஸ்.ஒய்.) திட்டத்தின் கீழ் இது அமைக்கப்படுகிறது.
இந்த எய்ம்ஸ் மையத்தில் 750 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை இருக்கும்,. இதில் அவசர சிகிச்சை மற்றும் விபத்து சிகிச்சைக்கான படுக்கைகள், ஆயூஷ் பிரிவுக்கென படுக்கைகள், தீவிர சிகிச்சை, சிறப்பு பிரிவு, மேம்படுத்தப்பட்ட சிறப்பு பிரிவுக்கான படுக்கைகளும் அடங்கும். இத்துடன் ஒரு நிர்வாக பிரிவும், ஆயுஷ் பிரிவும், இரவு தங்குமிடமும், விடுதி மற்றும் குடியிருப்பு வசதிகள் இருக்கும்.
பத்திண்டாவில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவ மையத்தின் மொத்த திட்டச்செலவு 925 கோடி ரூபாயாகும். இந்த செலவில் தொடரும் செலவினங்களான சம்பளம், செயல்பாடு, பராமரிப்பு செலவுகள் அடங்காது. எனவே தொடரும் செலவினங்களை, மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை பிரதம மந்திரியின் ஸ்வாஸ்தாய சுரக்ஷா யோஜ்னா திட்டத்தின் கீழ் வழங்கும் மானிய உதவியை கொண்டு ஆண்டுதோறும் நிதிநிலை அறிக்கை தயாரித்து பத்திண்டா எய்ம்ஸ் மருத்துவ மையமே செலவு செய்துகொள்ள வேண்டும்.
தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் முதல் மற்றும் 2ம் நிலை மருத்துவ மைய சேவைகளுடன் , அதிக எண்ணிக்கையில் மருத்துவர்கள், மற்றும் சுகாதார பணியாளர்களை கொண்டு, பத்திண்டா புதிய எய்ம்ஸ் மருத்துவ மையம், அந்த பகுதியில் தனி சிறப்பு மருத்துவ சேவையை வழங்கும்.
இந்த திட்டம் அத்திய அரசு ஒப்பளிப்பு அளித்த நாளில் இருந்து அடுத்த 48 மாதங்களுக்குள் நிறைவடையும். கட்டுமானத்திற்கு முந்தைய பணிகள் 15 மாதங்களும், கட்டுமானப்பணிகள் 30 மாதங்களும், நிலைநிறுத்தல் மற்றும் செயல்பாட்டுக்கு கொண்டுவரும் பணிகள் 3 மாதத்திலும் நிறைவடையும்.
பஞ்சாப் மாநிலத்தில் இந்த மருத்துவ மையத்தை சுற்றி உள்ள மக்கள் இதனால் பயன் அடைவார்கள்.
பின்னணி-
மத்திய அரசின் துறைசார்ந்த திட்டமான பிரதம மந்திரி ஸ்வாஸ்தய சுரக்ஷா யோஜனா திட்டம் 2003ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் அறிவிக்கப்பட்டது. நியாயமான, தரமான சிகிச்சை கிடைப்பதில் பிராந்திய சமச்சீரின்மையை போக்குவதே இந்த திட்டத்தின் பிரதான நோக்கமாகும். அத்துடன் பின்தங்கிய மாநிலங்களில் தரமான மருத்துவ கல்வி அளிப்பதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இந்த திட்டத்தின் கீழ் எய்ம்ஸ் மருத்துவ மையங்கள் புவனேஸ்வரம், ஜோத்பூர், ராய்பூர், ரிஷிகேஷ், போபால், மற்றும் பாட்னாவில் அமைக்கப்பட்டுள்ளது. ரே பரேலியில் எய்ம்ஸ் அமைக்கும் பணிகள் முன்னேற்றமான நிலையில் இருக்கிறது.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர், மேற்கு வங்க மாநிலம் கல்யாணி, மற்றும் ஆந்திரமாநிலம் குண்டூர் ஆகிய இடங்களில் எய்ம்ஸ் மையம் அமைக்க 2015ம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.