Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பத்திரிகையாளரும், எழுத்தாளருமான திரு அஜய் சிங் எழுதியுள்ள சமூகத்தின் விளிம்புநிலை மக்களுக்கான சமூக நலத்திட்டங்களை எடுத்துரைக்கும் கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்


பத்திரிகையாளரும், எழுத்தாளருமான திரு அஜய் சிங் எழுதியுள்ள கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு தொடர்ந்து நீண்டகாலம் இந்தியாவின் பிரதமராக பொறுப்பு வகிக்கும் திரு நரேந்திர மோடிக்கு இக்கட்டுரையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூகத்தின் விளிம்புநிலை மக்களுக்கான பிரதமர் மோடியின் சமூக நலத்திட்டங்கள் குறித்தும், மக்களின் முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும் பாராட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

“ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு தொடர்ந்து நீண்டகாலம் இந்தியாவின் பிரதமராக பொறுப்பு வகிக்கும் திரு நரேந்திர மோடிக்கு இக்கட்டுரையில் பாராட்டு தெரிவித்துள்ள திரு அஜய் சிங், இந்தியாவின் அறிவுத்திறனின் அடையாளமாகப் பிரதமர் மோடி திகழ்கிறார் என்றும், நாட்டின் அரசியல் சிந்தனையை மாற்றியுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார். சமூகத்தின் விளிம்புநிலை மக்களுக்கான பிரதமர் மோடியின் சமூக நலத்திட்டங்கள் குறித்தும், மக்களின் முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும் அவர் பாராட்டியுள்ளார்.”

***

(Release ID: 2271418)

SS/IR/RJ/KR