Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பஹத்பூர் கிராமத்தில் உள்ள திறன் மேம்பாட்டு மையத்தைப் பிரதமர் பார்வையிட்டார்; திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்தப்படுவதைப் பாராட்டினார்

பஹத்பூர் கிராமத்தில் உள்ள திறன் மேம்பாட்டு மையத்தைப் பிரதமர் பார்வையிட்டார்; திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்தப்படுவதைப் பாராட்டினார்


பிரதமர் திரு நரேந்திர மோடி, பஹத்பூர் கிராமத்தில் உள்ள ஒரு  திறன் மேம்பாட்டு மையத்தைப் பார்வையிட்டார்.

குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, திறன் மேம்பாட்டுத் துறையில் கவனம் செலுத்தி, தனது கிராமத்தின் வளர்ச்சிப் பயணத்திற்குப் புதிய உத்வேகம் அளித்துள்ளதை பிரதமர் குறிப்பிட்டார்.

புதிய வாய்ப்புகளையும், சுயசார்பையும் உருவாக்கும் திறன்களை இளைஞர்கள் பெறுவதைக் காண்பது மகிழ்ச்சியளிப்பதாக திரு மோடி கூறினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் தெரிவித்ததாவது:

பஹத்பூர் கிராமத்தில் உள்ள திறன் மேம்பாட்டு மையம் ஒன்றைப் பார்வையிட்டேன். குடியரசுத்தலைவர் அவர்கள் இத்துறையில் கவனம் செலுத்தியுள்ளதும், அதன் மூலம் தனது கிராமத்தின் வளர்ச்சிப் பயணத்திற்கு அவர் அளித்துள்ள உத்வேகமும் குறிப்பிடத்தக்கவை.

புதிய வாய்ப்புகளையும் சுயசார்பையும் உருவாக்கும் திறன்களை நமது இளைஞர்கள் பெறுவதைக் காண்பது உளமாற மகிழ்ச்சியளிக்கிறது.

***

(Release ID: 2275852)

TV/RB/RJ