Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் பிரதமர் மோடியுடன் தொலைபேசி மூலம் உரையாடல்


பத்தான்கோட் விமான தளைத்தில் நடந்த தாக்குதல் குறித்து பாகிஸ்தான் பிரதமர் திரு. முகமது நவாஸ் ஷெரிப் பிரதமர் திரு. நரேந்திர மோடியை தொலைபேசியில் அழைத்து பேசினார்.

பத்தான்கோட்டில் நடந்த தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டுள்ள அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் மீது பாகிஸ்தான் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அப்போது கேட்டுக்கொண்டார். இந்த தாக்குதல் தொடர்பான அனைத்து தகவல்களும் பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அரசு தீவிரவாதத்தை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கும் என்று பிரதமர் நவாஸ் ஷெரிப் உறுதி அளித்தார்.