பி.எம்.இந்தியா
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பட்னாவில் ரூ. 13,365.77 கோடி மதிப்பிலான (i) தானப்பூர்- மித்தாப்பூர் (ii) பாட்னா ரயில்வே நிலையத்தில் மாநிலங்களுக்கு இடையேயான புதிய முனையம் ஆகிய இரண்டு மெட்ரோ ரயில் தடங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
திட்ட விவரங்கள்:
• இத்திட்டம் ஐந்து வருடங்களில் முடிக்கப்படும்
• தானாப்பூர் – மித்தாப்பூர் வழித்தடம் நகரின் மையப் பகுதியின் ஊடே அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட ராஸா பஸார், தலைமைச்செயலகம், உயர்நீதிமன்றம், சட்டப்பல்கலைக்கழக ரயில் நிலையம் ஆகிய பகுதிகளை இணைக்கும்.
• பட்னா ரயில் சந்திப்புக்கும் மாநிலங்கள் இடையே பேருந்து முனையத்திற்கும் இடையேயான வழித்தடம் காந்தி மைதான், பட்னா பல்கலைக்கழகம், ராஜேந்திர நகர், மகாத்மா காந்தி சேது, போக்குவரத்து நகர் ஆகிய பகுதிகளை இணைக்கும்.
• இந்த மெட்ரோ ரயில் திட்டம் பட்னாவாசிகள், பயணிகள், தொழிலாளர்கள், பட்னாவிற்கு வருகை தருவோர் ஆகியோருக்கு பசுமையான நட்போடு கூடிய நீடிக்கத்தக்க பொது போக்குவரத்து வசதியை வழங்கும்.