பி.எம்.இந்தியா
பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பு குறித்து இந்தியா-ஜெர்மனி இடையே ஏற்கனவே செய்யப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஆசிய பகுதியில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை உருவாக்கும் நோக்கத்தோடு ஏற்பட்டுள்ள இந்தியா-ஜெர்மனி உறவு இந்த ஒப்பந்தம் மூலம் மேலும் வலுவடையும். பயங்கரவாதத்தை எதிர்த்து போராடவும், சட்டவிரோத போதை மருந்து கடத்தல்களை ஒழிக்கவும், நாடு கடந்த குற்றங்களை தடுக்கவும் இந்த ஒப்பந்தம் பலம்வாய்ந்த ஆயுதமாக மாறும். தகவல்கள், தொழில்நுட்ப நிபுணத்துவம், திறன் மேம்பாடு ஆகியவற்றைப் பரிமாறுவது மூலம் இது சாத்தியமாகும்.
இந்தியா மற்றும் ஜெர்மனி இடையேயான பாதுகாப்பு குறித்த ஒத்துழைப்பையும் செயல்திறனையும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.