Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பாரத ரத்னா கர்பூரி தாக்கூரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்


பீகார் முன்னாள் முதலமைச்சர் பாரத ரத்னா கர்பூரி தாக்கூரின் பிறந்தநாளில் பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

சமூகத்தின் ஒடுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினரின் மேம்பாடு எப்போதும் கர்பூரி தாக்கூரின் அரசியலின் மையமாக இருந்தது என்று பிரதமர் கூறியுள்ளார். மக்கள் தலைவர் கர்பூரி தாக்கூர், அவரது எளிமைக்காகவும், பொது சேவைக்கான வாழ்நாள் அர்ப்பணிப்புக்காககவும் எப்போதும் நினைவுகூரப்படுவார் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

பீகாரின் முன்னாள் முதலமைச்சரும் பாரத ரத்னா விருது பெற்றவருமான கர்பூரி தாக்கூருக்கு அவரது பிறந்தநாளில் மரியாதை செலுத்துகிறேன். சமூகத்தின் ஒடுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினரின் மேம்பாடு எப்போதும் கர்பூரி தாக்கூரின் அரசியலின் மையமாக இருந்தது. ஜன நாயக் (மக்கள் தலைவர்) கர்பூரி தாக்கூர், அவரது எளிமைக்காகவும், பொது சேவையில் வாழ்நாள் முழுவதும் கொண்ட அர்ப்பணிப்புக்காகவும் எப்போதும் நினைவுகூர்ந்து பின்பற்றப்படுவார்.”

***

(Release ID: 2218000)

TV/PLM/RJ