Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பாரம்பரிய மருத்துவமுறை மற்றும் ஓமியோபதி தொடர்பாக இந்தியா –தான்சானியா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, இந்தியா மற்றும் தான்சானியா இடையே பாரம்பரிய மருத்துவ முறை மற்றும் ஓமியோபதி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு மேற்கொள்வது தொடர்பாக கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளித்தது.

இந்தியா மற்றும் தான்சானியா இடையே, இந்தியா பாரம்பரிய மருத்துவமுறை மற்றும் ஓமியோபதி மருத்துவ முறைகளை பிரபலப்படுத்தவும், வளர்த்தெடுக்கவும் இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவி செய்யும்.

இந்த ஒப்பந்தத்தால் கூடுதல் செலவினம் கிடையாது. இந்த ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக நடத்தப்படும் ஆராய்ச்சிகள், பயிற்சிகள், கலந்துரையாடல்கள், கூட்டங்கள் ஆகியவற்றுக்கு ஆயுஷ் அமைச்சகத்துக்கு ஒதுக்கப்படும் நிதியில் இருந்து செலவிடப்படும்.

பின்னணி :

ஏராளமான மருத்துவ குணம் கொண்ட மூலிகைகள் இந்தியாவில் அதிக அளிவில் காணப்படுகின்றன. மேலும் பாரம்பரிய மருத்துவத்தில் இந்தியா சிறந்து விளங்குகிறது. இந்த மருத்துவ முறைகளை உலக அளவில் எடுத்துச் செல்வது அவசியமாகும். தான்சானிய மக்களிடையேயும், பாரம்பரிய மருத்துவம் பிரபலமாக உள்ளது. பெரிய மருத்துவமனைகளுக்கு செல்வதற்கு முன்பாக, முதலுதவி அல்லது பூர்வாங்க சிகிச்சைக்கு பாரம்பரிய மருத்துவ முறைகளையே தான்சானிய மக்கள் கையாள்கிறார்கள்.

ஏறக்குறைய 70 ஆயிரம் இந்திய வம்சாவளியினரைக் கொண்ட தான்சானியா, இந்தியாவின் ஒரு முக்கியமான கிழக்கு ஆப்பிரிக்க நட்பு நாடாகும். இந்தியா மற்றும் தான்சானியா இடையே நல்ல நட்புணர்வு நிலவி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இரு நாடுகளிடையே உள்ள நட்புணர்வு சுகாதாரம் மருத்துவம் போன்ற துறைகளில் உள்ள ஒத்துழைப்பினால் வளர்ந்து வருகிறது.

இந்திய மருத்துவ முறைகளை உலகளாவிய முறையில் பரவச் செய்யும் ஆயுஷ் துறையின் முயற்சிகளால், சீனா, மலேசியா, ஹங்கேரி வங்காளதேசம் மற்றும் நேபாளம் போன்ற நாடுகளுடன் இது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.