Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பின்லாந்து அதிபரின் பயணத்தின் பலன்கள்

பின்லாந்து அதிபரின் பயணத்தின் பலன்கள்


புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் / உடன்படிக்கைகள்

1

குடியமர்வு மற்றும் போக்குவரத்து கூட்டாண்மை குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம்

இந்திய தொழில்முறையாளர்களுக்கு குறிப்பாக தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புத் துறைகளை சேர்ந்தவர்களுக்கு முக்கிய இடமாக பின்லாந்து உருவாகியுள்ளது. குடியமர்வு மற்றும் போக்குவரத்து கூட்டாண்மை குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் திறமையின் பரிமாற்றத்திற்கு வழிவகுக்கும்.

2.

சுற்றுச்சூழல் ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் புதுப்பித்தல்

நவம்பர் 2020-ல் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.  உயிரி எரிசக்தி, கழிவில் இருந்து எரிசக்தி தீர்வு, மின்சார சேகரிப்பு, நெகிழ்வான புதுப்பிக்கத்தக்க எரிச்கதி நடைமுறைகள்பசுமை ஹைட்ரஜன், காற்றாலை, சூரியசக்தி, சிறிய வகை நீர்மின் உற்பத்தி உள்ளிட்ட முக்கிய துறைகளில் நீடித்தத் தன்மைக்கு பங்களிப்பு செய்யும் ஒத்துழைப்பை இது உள்ளடக்கி இருக்கும்.

3

புள்ளியியல் துறையில் ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம்

அதிகாரப்பூர்வ புள்ளியியல் துறையில் அனுபவங்கள் / சிறந்த நடைமுறைகள், ஒத்துழைப்பு ஆகியவற்றில் பரஸ்பர பரிமாற்றத்தை உருவாக்குவது

வ.எண் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் / உடன்படிக்கைகள் விளக்கம்

உடன்படிக்கைகள்

வ.எண்

தலைப்பு

1

டிஜிட்டல்மயம் மற்றும் நீடித்த தன்மையில் உத்திசார் கூட்டாண்மைக்கு இந்தியா – பின்லாந்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துதல்

2

மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை – பின்லாந்தின் பின்னிஷ் புத்தாக்க நிதி முகமை இடையே அமலாக்க ஏற்பாட்டின் கீழ் கூட்டு ஆராய்ச்சிக்கான அழைப்பு 

3

2030-க்குள் இந்தியா – பின்லாந்து இடையே தற்போதுள்ள இருதரப்பு வர்த்தகத்தை இருமடங்கு ஆக்குவதற்கான இலக்கு (அண்மையில் நிறைவடைந்த இந்தியா – ஐரோப்பிய ஒன்றிய தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை பயன்படுத்துவதன் மூலம்)

4

டிஜிட்டல்மயம் குறித்து பல்துறை கூட்டுப் பணிக்குழு அமைத்தல் (5ஜி, 6ஜி, குவாண்டாம் தொடர்புகள், குவாண்டம் கம்பியூட்டிங், செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பை அதிகப்படுத்துதல்)

5

6ஜி குறித்த கூட்டுப் பணிக்குழு உருவாக்குதல் (பின்லாந்தின் ஓலு பல்கலைக்கழகம் மற்றும் பாரத் 6ஜி கூட்டணி மூலம் 6ஜி ஆய்வு)

6

இந்தியா – பின்லாந்து ஸ்டார்ட்-அப் தளம் மூலம் ஸ்டார்ட்-அப் சூழல் அமைப்புகளின் மாபெரும் இணைப்பை உருவாக்குதல் (ஹெல்சிங்கியின் ஸ்லஷில் இந்திய புத்தொழில் நிறுவனங்கள், புதுதில்லியில் ஸ்டார்ட்-அப் மகாகும்ப் நிகழ்வில் பின்லாந்தின் புத்தொழில் நிறுவனங்கள் தீவிரப் பங்கேற்பு)

7

இந்தியாவில் 2026-ல் நடைபெறும் உலக சுழற்சிப் பொருளாதார அமைப்பை இணைந்து நடத்துவது (மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்ற அமைச்சகம் மற்றும் பின்னிஷ் புதிய கண்டுபிடிப்பு நிதியம் சிட்ரா மூலம்)

8

சம்பந்தப்பட்ட வெளியுறவு அமைச்சகங்களுக்கு இடையே தூதரக நிலையில் பேச்சுவார்த்தை நடத்துதல்

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2235586&reg=3&lang=1

***

TV/SMB/RJ/SH