பி.எம்.இந்தியா
வங்காளதேச பிரதமர், பூடான் பிரதமர், இந்திய பிரதமர், மியான்மர் நாட்டின் மக்கள் ஆட்சிக்கான தேசிய அமைப்பின் தலைவர் நேபாள பிரதமர், இலங்கை ஜனாதிபதி, தாய்லாந்து சிறப்பு தூதர், ஆகிய நாங்கள் அக்டோபர் 16ஆம் தேதி கோவாவில் நடந்த பிரிக்ஸ்-பிம்ஸ்டெக் மாநாட்டில் சந்தித்தோம்.
உலகளாவிய வளர்ச்சியில் பங்காற்றியதற்காக ஐநா சபையினால் வழங்கப்படும் முதல் மனித மேம்பாட்டு வாழ்ந்தாள் சாதனை விருதை வாங்கிய மாட்சிமை பொருந்திய பூமிபொல் அடுல்யாதேஜ் அவர்களின் மரணத்திற்கு எங்கள் இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம். அரச குடும்பத்திற்கும், மக்களுக்கும், தாய்லாந்து அரசுக்கும் எங்கள் அனுதாபங்களை உரித்தாக்குகிறோம்.
பிரிக்ஸ் தலைவர்களுக்கும், பிம்ஸ்டெக் தலைவர்களும் சந்திக்கும் வகையில் இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்ததற்கு எங்கள் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம். இதன்மூலம் ஐநா 2030 மேம்பாட்டுக் கொள்கை உட்பட பல முக்கியமான உலகப்பிரச்சினைகளையும், உள்நாட்டுப் பிரச்சினைகளையும் பரஸ்பரம் பகிர்ந்து ஆலோசிக்க முடிந்தது. இதன் மூலம் இரு குழு தலைவர்களுக்குள்ளும் நம்பிக்கையும், இருதரப்பு நன்மைக்காகவும் இணைந்து பணியாற்றுவதும் அதிகரிக்கும்.
1997 பாங்காக் பிரகடனத்தில் வெளியிடப்பட்ட கொள்கைகளை நினைவுகூரும்போது, பிம்ஸ்டெக்க்குள் நிலவும் ஒத்துழைப்பு என்பது இறையாண்மை சமத்துவம், பகுதிசார் ஒற்றுமை, அரசியல் சுதந்திரம், உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாமல் இருத்தல், அமைதியான ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர பயன்கள் ஆகியற்றை சார்ந்தே இருக்கும். v
எங்கள் முயற்சிகளை இன்னும் வீரியமிக்கதாக அமைத்து 1997 பாங்காக் பிரகடனத்தில் குறிப்பிட்டப்பட்டுள்ள பிம்ஸ்டெக்கின் கொள்கைகளையும், நோக்கங்களையும் நனவாக்குவதோடு, பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டில் பிம்ஸ்டெக்ன் பங்களிப்பு இருக்குமாறு உறுதி செய்ய பரஸ்பரம் ஒத்துக்கொள்கிறோம். பிம்ஸ்டெக் மேலும் வலுவாக மாறவும், முடிவுகள் சார்ந்து செயலாற்றும் வகையில் மேம்படுத்தவும் இணைந்து பணியாற்ற உறுதி ஏற்கிறோம்.
மார்ச்04,2014ம் ஆண்டு நே பீ டா அவர்கள் வெளியிட்ட மூன்றாவது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டின் அறிவிப்பை நினைவில் கொண்டு, வங்காள வரிகுடாவின் பிராந்திய ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பை முன்னிறுத்தும் அமைப்பாக பிம்ஸ்டெக்கை மீண்டும்வலியுறுத்த விரும்புகிறோம். புவியியல் நெருக்கத்தையும், ஏராளமான இயற்கை மற்றும் மனித வளங்கள், உயர்ந்த வரலாற்று தொடர்பும், கலாச்சார பாரம்பரிய பகிர்வையும் கருத்தில் கொண்டு, அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பை முன்னிறுத்த பிம்ஸ்டெக் ஒரு சிறந்த தளமாக கருதுகிறோம்.
தீவிரவாதம் அமைதிக்கும், ஸ்திரதன்மைக்கும் ஒரு பிரச்சினையாக இருப்பதை மனதில் வைத்து, எல்லாவிதமான தீவிரவாதங்களையும் ஒற்றுமையாக ஒடுக்குவோம் என்றும், தீவிரவாதத்தை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்றும் உறுதி எடுத்துள்ளோம். சமீபத்தில் காட்டுமிராண்டித்தனமாக நடந்த தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். தீவிரவாதத்திற்கு எதிரான நமது நடவடிக்கைகள் தீவிரவாதிகளை மட்டும் ஒடுக்குவதோடு நில்லாமல், தீவிரவாதத்திற்கு பொருளாதார, வசிப்பிட உதவி அளித்து துணை நிற்பவர்களையும் ஒடுக்குவதாக அமைய வேண்டும். தீவிரவாதிகளை தியாகிகளாக நினைவுகூர்தல் அறவே ஒழிக்கப்பட வேண்டும். தீவிரவாதம் பரவுவதையும், பயங்கரவாதம் உருவாதையும் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டியதன் அவசியத்தை உணர வேண்டும். காவல்துறை, உளவுத்துறை, பாதுகாப்பு அமைப்புகள் ஆகியவை இணைந்து செயலாற்றுவதன்மூலம், பரஸ்பரம் ஒத்துழைப்பை நல்குவதன் மூலமும் நாம் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க முடியும்.
பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில் கையெழுத்தான குற்றங்களுக்கு எதிரான பரஸ்பர ஒத்துழைப்பு உறுதிப்பாட்டையும், சர்வதேச தீவிரவாதம், ஒழுங்குபடுத்தப்பட்ட நாடு தாண்டிய குற்றங்கள், போதை மருந்து கடத்தல் ஆகியவற்றுக்கு நடவடிக்கைகளில் வலியுறுத்தப்பட்ட ஒத்துழைப்பையும் உடனே அமல்படுத்த உறுதி பூண்டுள்ளோம்.
தட்பவெட்ப மாற்றத்தால் நம் பூமிக்கு ஏற்பட இருக்கும் பேராபத்தையும், வங்காள விரிகுடா பகுதியில் இருக்கும் மக்களின் வாழ்வியலையும் மனதில் கொண்டு, சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் ஒத்துழைக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. தக்கவைக்க கூடிய வளர்ச்சியில் கவனம் செலுத்தவேண்டியதன் அவசியத்தையும், தட்பவெட்ப மாற்றம் குறித்த பாரீஸ் உடன்பாட்டை சர்வதேச அளவிலும், உள்நாட்டு அளவிலும் நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகிறோம்.
பேரழிவு சமயங்களை சமாளிக்க கூட்டு பயிற்சிகள், எச்சரிக்கை சிஸ்டம் குறித்த தகவல் பரிமாற்றங்கள், தடுப்பு முன்னேற்பாடுகள், கூட்டு நடவடிக்கை, நிவாரணம் மற்றும் மறு குடி அமர்வு போன்றவற்றில் ஒத்துழைப்பை ஊக்குவித்துள்ளோம். இந்த துறையில் பகுதிசார் கட்டமைப்பை மேம்படுத்தி, உள்நாட்டு மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து செயல்படவும் ஒப்புக்கொண்டுள்ளோம்.
தொடர்புத்துறையை மேம்படுத்துவதே பகுதிசார் ஒற்றுமைக்கு வழிவகுக்கும் என்பதை புரிந்துகொண்டு, பிம்ஸ்டெக் பகுதியில் விமான, ரயில், நீர், சாலை போக்குவரத்துக்களை மேம்படுத்துவதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் திருப்திகரமாக உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். பிம்ஸ்டெக் போக்குவரத்து உட்கட்டமைப்பு, லாஜிஸ்டிக்ஸ் ஆகியவற்றில் பரிந்துரைகளை அமல்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளும் திருப்திகரமாகவே உள்ளது. பிம்ஸ்டெக் மோட்டார் வாகன ஒப்பந்தம் ஒன்றை உருவாக்க கூடிய வாய்ப்புகளை பற்றியும் ஆலோசிக்கிறோம்.
நிலைத்திருக்கக்கூடிய கூடிய விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு குறித்த எங்கள் உறுதியை வலுப்படுத்தும் வகையில், பயிர்கள், கால்நடைகள், தோட்டக்கலை உள்ளிட்ட விவசாயத்துறைகளில் ஒத்துழைப்பை அதிகப்படுத்துவதிலும், உற்பத்தியை பெருக்கும் பொருட்டு கூட்டுமுயற்சியை மேம்படுத்துவதிலும் என்றும் இணைந்து செயல்பட முடிவுசெய்துள்ளோம்.
வங்காள விரிகுடா பகுதி உலக மீனவர் தொகையில் முப்பது சதவிகிதத்தை கொண்டுள்ளது என்பதை கருத்தில்கொண்டு, மீன்வளத்துறையில் தக்கவைக்ககூடிய வளர்ச்சியை உறுதிசெய்வதன் மூலம் இந்த பகுதியில் உணவு பாதுகாப்பை பெருக்கி, இந்தப் பகுதி மக்களின் வாழ்வியல் சூழலை மேம்படுத்தும் நோக்கில், இத்துறையில் கூட்டாக செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.
நம் பகுதிகளுக்கு கடல்சார் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் உதவக்கூடும் என்பதை அறிந்துகொண்டு, உள்நாட்டு மற்றும் கடலோர மீன் வளர்ப்பு, நீர்நிலை பரப்பாய்வு, கடல் தாது கண்டெடுப்பு, சுற்றுலா ஆகிய துறைகளில் கூட்டாக பணியாற்ற வழிமுறைகளை கண்டுகொள்வது என்று முடிவுசெய்யப்பட்டுள்ளது.
மலைப்பகுதிகளில் இருந்து பெறப்படும் பயன்கள் தக்கவைக்கக் கூடிய வளர்ச்சிக்கு அத்தியாவசியமானவை என்பதை கண்டறிகிறோம். எனவே மலைசார் சுற்றுச்சூழல் மற்றும் உயிர பாதுகாப்பில் இனி கூடுதல் முனைப்பு காட்ட முடிவுசெய்யப்பட்டுள்ளது.
பிம்ஸ்டெக் உறுப்பினர்களிடையே ஆற்றல் துறையில் ஒத்துழைப்பு பெருகிவருவதை வரவேற்கிறோம். பிம்ஸ்டெக் க்ரிட் இண்டர்கனெக்சன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை விரைவாக செயல்படுத்த முடிவுசெய்துள்ளோம். பிம்ஸ்டெக் ஆற்றல் மையத்தை விரைவாக செயல்படவைப்பதற்காக நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் ஆற்றல் ஆதாரங்கள், குறிப்பாக புதுப்பிக்கமுடிந்த மற்றும் சுத்தமான ஆற்றல் ஆதாரங்கள் அதிக அளவில் இருப்பதை கருத்தில்கொண்டு, இந்த துறையில் ஒத்துழைப்பை பெருக்கி, பகுதிசார் ஆற்றல் வர்த்தகத்திற்கு வழிவகுக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.
பிம்ஸ்டெக் வரியற்ற வர்த்தக மண்டலம் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் போது நாங்கள் கொடுத்த உறுதிமொழியையும், வர்த்தக பேச்சுவார்த்தை கமிட்டி(TNC)யை வழிநடத்துவது, பணி குழுக்களை விரைவுபடுத்துவது ஆகியவை சார்ந்து நாங்கள் அளித்த வாக்குறுதிகளை புதுப்பித்துக் கொள்கிறோம்.
சேவை மற்றும் முதலீடு சார்ந்த ஒப்பந்தங்களுக்காக பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்துமாறு TNCஐ வலியுறுத்துவோம். வணிக உதவிகளை மேம்படுத்த வலுவான நடவடிக்கைகளை எடுக்கவும் ஒப்புக்கொண்டுள்ளோம். குறைந்த அளவில் முன்னேறிய நாடுகள் தங்கள் உள்நாட்டு பொருளாதாரத்தை வலுவாக்கும் வகையில் அவற்றுக்கு தனி கவனம் செலுத்தப்படும் என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
வளர்ச்சி, தொடர்பு மற்றும் SMEஉள்ளிட்ட தொழில்நுட்ப தேவைகளுக்கான முக்கியத்துவத்தை உணர்ந்து, பிம்ஸ்டெக் தொழில்நுட்ப பரிமாற்ற மையத்தை இலங்கையில் அமைப்பது சார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை துரிதமாக முடிவு செய்ய வலியுறுத்துகிறோம்.
பொது சுகாதாரம் சார்ந்த பிரச்சினைகளை கூட்டாக எதிர்கொள்வதை தொடர உள்ளோம். பிம்ஸ்டெக் பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கான ஒருங்கிணைப்புக்கான தேசிய மையங்களின் வலையம் மற்றும் அதன் பணி அமைப்பை விரிவு படுத்தவும், அந்த துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் முடிவுசெய்துள்ளோம்.
மேம்பட்ட புரிதல் மற்றும் நம்பிக்கையின் மூலம் மக்கள் தொடர்பை உறுப்பினர் நாடுகளையே அதிகப்படுத்த முனைந்துள்ளோம். பிம்ஸ்டெக் கொள்கை முடிவெடுக்கும் சிந்தனையாளர் குழாமின் (BNPTT) இரண்டு சந்திப்பும் திருப்திகரமாக இருந்ததை என்பதை குறிப்பிடும் அதே சமயம், அதேபோல சந்திப்புகளை அமைக்கவும் வலியுறுத்துகிறோம். கல்வி மற்றும் ஆராய்ச்சி மையங்களிடையே தொடர்பை மேம்படுத்தவும் ஒப்புக்கொண்டுள்ளோம்.
இப்பகுதியில் உள்ள நாடுகளிடையே குடியமைப்பு, வரலாற்று மற்றும் கலாச்சார தொடர்புகளில் உள்ள ஒற்றுமைகளை மனதில்கொண்டு சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதில் ஒருசேர அக்கறை காட்டுவதன்மூலம், பிம்ஸ்டெக் பகுதி சுற்றுலாவை தனி ஒரு சுற்றுலா பிரதேசமாக மாற்ற முடியும். குறிப்பாக புத்தமத சுற்றுலா மற்றும் கோவில் சுற்றுலாவுக்கு தனித்துவம் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிம்ஸ்டெக் கலாசார தொழில் ஆணையம், பிம்ஸ்டெக் கலசார தொழில்கள் கண்காணிப்பகம் ஆகியவற்றை பூடானில் அமைப்பதை துரிதப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மையங்கள் கலாச்சாரம் சார்ந்த தகவல் மையங்களாக செயல்படும்.
2012ல் நேபாலில் நடந்த வறுமை குறித்த பிம்ஸ்டெக் மினிஸ்டெரியல் மீட்டிங்கில் கொண்டுவரப்பட்டு, மார்ச் 2014ல் மியான்மரில் நடந்த மூன்றாவது பிம்ஸ்டெக் மாநாட்டில் ஒப்புக்கொள்ளப்பட்ட, பிம்ஸ்டெக் வறுமை ஒழிப்பு திட்டத்தை செயல்படுத்துவதில் எங்கள் உறுதியை மீண்டும் ஒருமுறை தெரிவிக்கிறோம்.
செப்டம்பர் 2014முதல் பிம்ஸ்டெக் நிரந்தர செயலகம் டாக்காவில் செயல்படதுவங்கிவிட்டது குறித்த எங்கள் திருப்தியை தெரிவித்துக்கொள்கிறோம்.
2017ஆம் ஆண்டில் பிம்ஸ்டெக் துவங்கி 20 ஆண்டுகள் ஆனதை நினைவுகூரும் வகையில் பல கொண்டாட்ட நிகழ்வுகள் நடத்த பிம்ஸ்டெக் செயலகம் திட்டமிட்டுள்ளது.
பிம்ஸ்டெக் பயனுள்ளதாக அமைய பகுதிசார் ஒத்துழைப்பு அவசியம் என்பதையும், பிம்ஸ்டெக் செயல்பாடுகள் அனைத்துக்குமான சந்திப்புகள் குறித்த நேரத்தில் நடத்தப்படும் என்பதையும் குறிப்பிட்டுக் கொள்கிறோம்.
வங்காளதேசம், பூடான், மியான்மர், நேபாளம், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகளின் தலைவர்களான நாங்கள், எங்களுக்கு சிறப்பான வரவேற்பும், மாநாட்டுக்கான ஏற்பாடுகளையும் செய்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றிகளை உரித்தாக்குகிறோம்.
2017ல் நேபாலில் நடக்க இருக்கும் பிம்ஸ்டெக் மாநாட்டை ஆவலோடு எதிர் நோக்கியுள்ளோம்.