Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரகதி மூலம் பிரதமர் கலந்துரையாடல்

பிரகதி மூலம் பிரதமர் கலந்துரையாடல்

பிரகதி மூலம் பிரதமர் கலந்துரையாடல்


பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று சிறந்த நிர்வாகம் மற்றும் உரிய நேரத்தில் அமல்படுத்துவதற்கான அமைப்பான பிரகதி மூலமான தனது ஏழாவது கலந்துரையாடலுக்கு தலைமையேற்றார்.

இன்றைய ஆய்வின்போது பிரதமர், பிரதம மந்திரி ஜன் தன் யோஜனாவில் உள்ள குறைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்களுக்கு ஜன் தன் கணக்குகள் மூலமாக கிடைக்க உள்ள பலன்களை விரிவான விளம்பரங்கள் மூலமாக, குறிப்பாக மொபைல் போன்கள் மூலமாக எடுத்துரைக்க வேண்டும் என்று அப்போது அவர் கூறினார்.

ரயில்வே துறையில் உள்ள குறைகளை ஆய்வு செய்த பிரதமர், ரயில்வே நிலையங்களிலும், ரயில்களிலும் கழிப்பிட வசதிகள், குறித்து ஆய்வு செய்தார். ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் தூய்மைப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடிவடிக்கைகள் பற்றி அவருக்கு விளக்கப்பட்டது.

இந்திய வங்களாதேச எல்லைப் பகுதியில் வேலி அமைப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து, பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். தேசிய பாதுகாப்பில் எவ்விதமான சமரசமும் கிடையாது என்பதை உறுதியாக கூறிய பிரதமர், வங்களாதேசத்தோடு எல்லையை பகிர்ந்து கொள்ளும் ஐந்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு, இந்த வேலையை விரைவாக முடிக்குமாறு உத்தரவிட்டார்.

ஜம்மு காஷ்மீர், அசாம், அருணாச்சல பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஆந்திரா, ஒடிஷா, ஜார்க்கண்ட், சட்டீஸ்கர் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் நடைபெற்று வரும் ரயில்வே, மின்சாரம், நிலக்கரி, விமானநிலையங்கள் ஆகிய உட்கட்டமைப்பு பணிகளில், ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து பிரதமர் கேட்டறிந்தார். பூட்டானில் செயல்படுத்தப்பட்டு வரும் மூன்று நீர் மின் நிலையங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து பிரதமரிடம் விளக்கப்பட்டது.

ஆதார் அட்டைகளுக்கு ஆள் சேர்க்கும் பணியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பிரதமர் கேட்டறிந்தார். அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களும், ஜன் தன் கணக்குகள் மற்றும் ஆதார் அட்டைகள் மூலமாக மக்களுக்கு பயன்களை வழங்க நடவடிக்கை எடுப்பதன் மூலமாக தேவையற்ற முறையில் ஏற்படும் விரயங்களை தவிர்த்து, மக்களுக்கு அதன் பலன் முழுமையாக சேரும் என்றார்.

•••••