பி.எம்.இந்தியா
இம்மாதம் நடைபெற உள்ள மனதின் குரல் நிகழ்ச்சிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆலோசனைகள் வழங்குமாறு கேட்டுக்கொண்டு உள்ளார். இது குறித்து பிரதமர் தெரிவித்தாவது:-
இம்மாதம் பிப்ரவரியில் நடைபெற உள்ள மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி குறித்து யோசனை செய்து கொண்டு இருந்தேன். பள்ளி தேர்வுகளுக்காகவும் இந்திய பணி தேர்வுகளுக்காகவும் தயாராகி கொண்டு இருக்கும் மாணவர்களுடன் ஏன் இந்த நிகழ்ச்சியை பகிர்ந்து கொள்ள கூடாது?
மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் தேர்வுக்கு தயார் செய்து கொண்டு இருக்கும் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். எப்போதும்போல உங்களுடைய எண்ணங்களையும் நிகழ்ச்சியின் போது பகிர்ந்து கொள்வேன் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.