Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமருடன் ஆசிய வளர்ச்சி வங்கி தலைவர் சந்திப்பு


s2015020561952 [ PM India 170KB ]

ஆசியா வளர்ச்சி வங்கியின் தலைவர் திரு. டாக்ஹிகோ நக்கோவா பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தார். இந்த சந்திப்பில் பிரதமர் தெரிவித்ததாவது:-

இந்திய ரயில்வே துறையை முக்கியமாக கருதி, ஆசிய வளர்ச்சி வங்கி மாற்றத்தை கொண்டுவரும் ஒரு திட்டத்தை முடிக்க வேண்டும். ஒரு ரயில் நிலையத்தைத் தேர்ந்தெடுத்து, ஆசிய வளர்ச்சி வங்கி அதனை உலக தரத்திற்கு மாற்றலாம். அதன் பிறகு ரயில்வே துறை இது போன்ற திட்டங்களை மேற்கொள்ளலாம். மேலும் அதிக பகுதிகளை இணைக்கும் திட்டங்களை ஆசிய வளர்ச்சி வங்கி ஊக்குவிக்க வேண்டும்.

s2015020561953 [ PM India 162KB ]

2014-ல் ரூ.1.4 பில்லியன் பணம்பட்டுவாடா செய்ததற்கு எனது வாழ்த்துகள். இது 2013யை விட 40 சதவீதம் அதிகமாகும் என்று பிரதமர் தெரிவித்தார்.

கடந்த ஆகஸ்ட் 2014-ல் திரு. நக்கோவாவை பிரதமர் சந்தித்தார். அதன் பிறகு அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் தெரிவித்தார். பிரதமர் மக்கள் நிதி திட்டம், சமையல் எரிவாயு மானியத்தில் பண பரிமாற்றம், இந்தியாவில் உற்பத்தி செய்வோம், தூய்மையான பாரதம் ஆகிய திட்டங்கள் குறித்து பிரதமர் தெரிவித்தார்.

பிரதமர் திரு. நரேந்திர மோடியை ஆசிய வளர்ச்சி வங்கி தலைவர் திரு. நக்கோவா இத்திட்டங்களுக்காக பாராட்டினார்.