Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகளின் எண்ணிக்கை 2 கோடியை எட்டியது – பிரதமர் மகிழ்ச்சி


பிரதமர் உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகளின் எண்ணிக்கை 2 கோடியை எட்டியதன் காரணமாக பிரதமர் திரு. நரேந்திர மோடி தந்து மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

“ஓர் ஆண்டுக்குள்ளாகவே பிரதமர் உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகளின் எண்ணிக்கை 2 கோடியை எட்டியது பெருமையையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது.

ஏழை பெண்களின் வாழ்க்கைத் தரத்தில் நல்ல மாற்றம் கொண்டு வரவேண்டும் என்ற உறுதியான கோட்பாட்டின் வழிகாட்டியால் உஜ்வாலா திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகளுக்கும் இத்திட்டம் வெற்றி பெற நேரம் பாராமல் அயராது உழைப்பவர்களுக்கும் எனது வாழ்த்துகள்”, என்று பிரதமர் கூறியுள்ளார்.

***