பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களும், வங்காளதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா அவர்களும், இன்று காணொலி காட்சி மூலமாக, இந்தியா மற்றும் வங்காளதேசம் இடையே இரண்டாவது தகவல் தொடர்பு இணைப்பை நாட்டுக்கு அர்ப்பணித்தனர். இந்த இணைப்பு திரிபுராவில் உள்ள சுர்ஜயாமணிநகர் மற்றும் வங்காளதேசத்தில் உள்ள தெற்கு கோமில்லா நகர்களை இணைக்கும்.
இரு தலைவர்களும் 10 ஜி.பி.பி.எஸ். திறன் கொண்ட இணைய சேவையை வங்காளதேசத்தில் உள்ள காக்ஸ் பஜார் மற்றும் அகர்த்தலாவோடு தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இந்திய வங்காளதேசத்தில் உறவில் இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணம் என்றார். இந்தியாவோடு மூத்த தலைவர் ஷேக் முஜிபுர் ரஹ்மான் பேணிய நெருக்கமான உறவை பிரதமர் நினைவு கூர்ந்தார். இந்தியா மற்றும் வங்காள தேசம் இடையே வளர்ந்து வரும் உறவை வரவேற்ற பிரதமர், இதற்கு பங்ளகாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் முயற்சிகள் காரணம் என்றார். மேலும் ஷேக் ஹசீனா அவர்கள் வங்கபந்துவின் (ஷேக் முஜிபுர் ரஹ்மான்) எண்ணங்களையும் இலக்குகளையும் முன்னெடுத்தி செயல்படுத்தி வருகிறார் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
தற்போது கிழக்குப் பகுதியில் தொடங்கப்பட்டுள்ள இணைய சேவை, வடகிழக்கு மாகாணங்களும் பெரும் வகையில் உதவி செய்து, அப்பகுதியில் தகவல் தொடர்பை மேம்படுத்த உதவும் என்று பிரதமர் குறிப்பிட்டார். இரு நாடுகளிடைய சாலை போக்குவரத்து உள்ளிட்ட பெருகி வரும் இணைப்புகளை பிரதமர் குறிப்பிட்டார்.
வங்காளதேசத்தில் வங்கபந்து செயற்கைக்கோளை ஏவுவதற்கு இந்தியா எல்லா உதவிகளையும் செய்யும் என்று பிரதமர் உறுதி கூறினார். இந்தியா மற்றும் வங்காள தேசம் இடைய நடக்க உள்ள டி20 கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளும் இரு அணிகளுக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.
Today is an important day in India-Bangladesh ties. Glad that several avenues of cooperation have opened between us. https://t.co/wCS5s20WJr
— Narendra Modi (@narendramodi) March 23, 2016
Opening of a new internet gateway in India's eastern part will greatly benefit Northeastern states & boost communication in the region.
— Narendra Modi (@narendramodi) March 23, 2016
Reiterated India's support to Bangladesh for launch of Bangabandhu satellite. And yes, conveyed best wishes to both teams for today's match!
— Narendra Modi (@narendramodi) March 23, 2016