Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் திரு நரேந்திர மோடி மொரீஷியஸ் பிரதமருடன் சந்திப்பு

பிரதமர் திரு நரேந்திர மோடி மொரீஷியஸ் பிரதமருடன் சந்திப்பு


செஷல்ஸ் நாட்டின்  பொன்விழா தேசிய தின கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அந்நாட்டிற்கு சென்றுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, விக்டோரியா நகரில் மொரீஷியஸ் பிரதமர் திரு நவீன்சந்திரா ராம்கூலத்தை சந்தித்துப் பேசினார்.

மொரீஷியஸ் நாட்டின் பிரதமராக திரு நவீன்சந்திரா ராம்கூலம் கடந்த 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் பொறுப்பேற்றுக் கொண்டதில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி அவரை சந்திப்பது இது நான்காவது முறையாகும்.

இந்த சந்திப்பின்போது, இந்தியா – மொரீஷியஸ் இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விரிவாக விவாதித்தனர். மேலும் மொரீஷியஸ் நாட்டிற்கு இந்தியா வழங்கியுள்ள சிறப்பு பொருளாதாரத் தொகுப்பை செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் அவர்கள் ஆய்வு செய்தனர்.

மொரீஷியஸ் நாட்டின் முன்னேற்றத்திற்காக இந்தியா அளித்து வரும் முக்கியத்துவம் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி அவரிடம் எடுத்துரைத்தார். சுகாதாரம், போக்குவரத்து வசதி, நீடித்த வளர்ச்சி, கடல்சார் பொருளாதாரம் போன்றவற்றிற்கு இது பெரும் பங்கு வகிக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்தியாவின் விஷன் மகா சாகர், அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை போன்ற கொள்கைகளின் கீழ், இவ்விரு நாடுகளுக்கிடையேயான மேம்பட்ட உத்திசார் ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறித்தும், உலகின் தென்பகுதியில் அமைந்துள்ள வளரும் நாடுகளின் நலனுக்கான கூட்டு அர்ப்பணிப்பு குறித்தும் இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

இந்தியா –  மொரீஷியஸ் இடையே பரஸ்பரம், வளர்ச்சி, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை, வளம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக இரு நாடுகளும் இணைந்து செயலாற்றுவது என இருநாட்டுப் பிரதமர்களும் முடிவு செய்துள்ளனர்.

***

RELEASE ID: 2278665

SS/SV/LDN/KR