பி.எம்.இந்தியா
புதுதில்லியில் நடைபெற்ற 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, பிரதமர் திரு நரேந்திர மோடி, உகாண்டா துணை அதிபர் திரு ஜெசிகா ரோஸ் எபெல் அலுபோ–வுடன் இன்று (13.09.2026) ஒரு சுமூகமான, பயனுள்ள இருதரப்பு சந்திப்பை நடத்தினார்.
இரு தலைவர்களும் இந்தியா – உகாண்டா இடையேயான இருதரப்பு உறவுகளை ஆய்வு செய்தனர். தொழில்நுட்ப ஒத்துழைப்பு, திறன் மேம்பாடு, அறிவுப் பகிர்வு, முதலீட்டு வசதி, இரு நாடுகளுக்கும் இடையேயான தனியார் துறை ஒத்துழைப்பு ஆகியவற்றின் மூலம் முக்கிய முன்னுரிமைத் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர்கள் வலியுறுத்தினர். இந்தியா – உகாண்டா இடையேயான வளர்ச்சி ஒத்துழைப்பு இரு நாடுகளுக்கும் ஒரு பாலமாக விளங்குகிறது என்பதையும் அவர்கள் சுட்டிக் காட்டினர். மாற்றமடைந்த, செழிப்பான உகாண்டாவிற்கான அதன் ‘விஷன் 2040′ திட்டத்திற்கு இந்தியாவின் ஆதரவை பிரதமர் மீண்டும் உறுதிப்படுத்தினார். மேலும், மக்களுக்கு இடையிலான உறவுகள், இந்த ஒத்துழைப்புக்குத் தொடர்ந்து உறுதியை அளித்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
உலக தென்பகுதி நாடுகளின் குரலுக்கு வலு சேர்க்கும் வகையில், இரு தலைவர்களும் மேலும் நெருங்கிய இருதரப்பு ஈடுபாட்டிற்கு அழைப்பு விடுத்தனர். உச்சிமாநாட்டில் பங்கேற்றதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடி, உகாண்டா துணை அதிபருக்கு நன்றி தெரிவித்தார்.
***
(Release ID: 2309761)
TV/PLM/RJ
PM @narendramodi met Vice President @jessica_alupo of Uganda on the sidelines of the BRICS Summit. He recalled his 2018 visit to Uganda and the Kampala Principles guiding India’s engagement with Africa. Discussions focused on deepening cooperation in healthcare, agriculture,… pic.twitter.com/FT4ktrnQvq
— PMO India (@PMOIndia) September 13, 2026
Delighted to meet Vice President Jessica Alupo of Uganda on the sidelines of the BRICS Summit. Recalled my memorable visit to Uganda in 2018 and the Kampala Principles that continue to guide India’s engagement with Africa.
— Narendra Modi (@narendramodi) September 13, 2026
We discussed ways to deepen cooperation in healthcare,… pic.twitter.com/Mg6jSsBJrt