பி.எம்.இந்தியா
புதுதில்லியில் நடைபெற்ற 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (13.09.2026) கஜகஸ்தான் அதிபர் திரு காசிம்–ஜோமார்ட் டோகாயேவை சந்தித்தார்.
கஜகஸ்தானுடனான இந்தியாவின் பாரம்பரிய நாகரிகத் தொடர்புகளை பிரதமர் திரு நரேந்திர மோடி நினைவு கூர்ந்தார். மேலும், சமீபத்திய ஆண்டுகளில் இந்தியா–கஜகஸ்தான் உறவுகளில் ஏற்பட்டுள்ள சீரான வளர்ச்சி குறித்து அவர் திருப்தி தெரிவித்தார். அரசியல், வர்த்தகம், பாதுகாப்பு, இணைப்பு, எரிசக்தி, முக்கிய கனிமங்கள், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், ஆக்கப்பூர்வ பொருளாதாரம், மக்களுக்கு இடையே உறவுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் இருதரப்பு ஒத்துழைப்பை இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர். பிராந்திய, சர்வதேச நிகழ்வுகள் குறித்த கண்ணோட்டங்களையும் அவர்கள் பரிமாறிக் கொண்டனர்.
இரு நாட்டு மக்களின் பரஸ்பர நலனுக்காகவும், அத்துடன் பிராந்தியத்தில் அமைதி, நிலைத்தன்மை, வளர்ச்சி, செழிப்புக்காகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான உத்திசார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை தலைவர்கள் மீண்டும் வலியுறுத்தினர்.
***
(Release ID: 2309747)
TV/PLM/RJ