பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று (13.09.2026) புதுதில்லியில் நடைபெற்ற 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, பிலிப்பைன்ஸ் அதிபர் திரு பெர்டினாண்ட் ஆர். மார்கோஸ் ஜூனியரை சந்தித்தார். ஆசியான் அமைப்பின் தற்போதைய தலைவரான பிலிப்பைன்ஸ், பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதை பிரதமர் வரவேற்றார்.
அனைத்துத் துறைகளிலும் இருதரப்பு ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தில் தலைவர்கள் திருப்தி தெரிவித்தனர். மேலும், பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, விண்வெளி, ரயில்வே, உள்கட்டமைப்பு, நிதித் தொழில்நுட்பம், கல்வி, சுற்றுலா, அறிவியல் – தொழில்நுட்பம், புத்தாக்கம், மக்களுக்கு இடையேயான உறவுகள் ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும் விரிவுபடுத்தவும் அவர்கள் ஒப்புக்கொண்டனர். ஆகஸ்ட் 2025-ல் அதிபர் மார்கோஸின் இந்திய அரசுமுறைப் பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையே நிறுவப்பட்ட உத்திசார் ஒத்துழைப்பின் கீழ் இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்த இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். பேரிடரை தாங்கும் உள்கட்டமைப்புக்கான கூட்டணியில் பிலிப்பைன்ஸ் இணைவதற்கான முடிவை பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்றார்.
இரு தலைவர்களும் பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய, உலகளாவிய பிரச்சினைகள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டதுடன், உத்திசார் ஒத்துழைப்பு அடிப்படையில் அனைத்துத் துறைகளிலும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர்.
***
(Release ID: 2309749)
TV/PLM/RJ
Delighted to meet President Ferdinand Marcos Jr. on the sidelines of the BRICS Summit. Wished him a very happy birthday too.
— Narendra Modi (@narendramodi) September 13, 2026
We reviewed the growing momentum in the India-Philippines Strategic Partnership.
Key focus areas are:
Economic linkages.
Technology.
Trade.… pic.twitter.com/14Q2z7oHct