Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் தேசிய மலிவு விலை மருந்துகள் வழங்கும் திட்டம், இருதய ஸ்டெண்டுகள் மற்றும் செயற்கை மூட்டு பொருத்தப்பட்டு பயன்பெற்ற பயனாளிகளுடன் ஜூன் 7ம் தேதி பிரதமர் கலந்துரையாடல்


 

பிரதமர் பாரதீய மலிவு விலை மருந்து வழங்கும் திட்டப் பயனாளிகள் மற்றும் கட்டுபடியாகக் கூடிய விலையிலான இருதய ஸ்டெண்டுகள் மற்றும் செயற்கை மூட்டு பொருத்தப்பட்ட பயனாளிகளுடன் ஜூன் 7ம் தேதி காலை 9.30 மணிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடுகிறார்.

இந்த திட்டங்கள் எவ்வாறு மாற்றம் ஏற்பட்டது என்பது குறித்து நோயாளிகளின் வாழ்வில் குறிப்பாக ஏழைகளிடம் இருந்து முதன்மை பின்னூட்டத்தைப் பெறுவது இந்தக் கலந்துரையாடலின் நோக்கமாகும்.

இந்த ஒட்டுமொத்த கலந்துரையாடல்களும் நமோ செயலி, யூட்யூப், ஃபேஸ்புக் உள்ளிட்ட மாறுபட்ட சமூக ஊடக மேடைகளில் மேற்கொள்ளப்படும்.

*****