Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் நரேந்திர மோடி அயர்லாந்து பிரதமருடன் கூட்டாக வெளியிட்ட செய்தியாளர்களுக்கான அறிக்கை

பிரதமர் நரேந்திர மோடி அயர்லாந்து பிரதமருடன் கூட்டாக வெளியிட்ட செய்தியாளர்களுக்கான அறிக்கை

பிரதமர் நரேந்திர மோடி அயர்லாந்து பிரதமருடன் கூட்டாக வெளியிட்ட செய்தியாளர்களுக்கான அறிக்கை

பிரதமர் நரேந்திர மோடி அயர்லாந்து பிரதமருடன் கூட்டாக வெளியிட்ட செய்தியாளர்களுக்கான அறிக்கை

பிரதமர் நரேந்திர மோடி அயர்லாந்து பிரதமருடன் கூட்டாக வெளியிட்ட செய்தியாளர்களுக்கான அறிக்கை


மேன்மைமிகு அயர்லாந்து குடியரசின் பிரதமர் என்டா கென்னி அவர்களே,

ஊடக நண்பர்களே,

அயர்லாந்துக்கு வருகை தந்ததில் உண்மையில் மிகவும் மகிழ்கிறேன். இது வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம். ஓர் இந்திய பிரதமர் அயர்லாந்து வருவதற்கு 59 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன.

நீங்கள் அளித்த அன்பான வரவேற்பு மற்றும் கருணை மிகுந்த உபசரிப்புக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவுடனான நட்புறவு குறித்த உங்களின் இனிய வார்த்தைகளுக்கு நன்றி.

இந்தியாவும் அயர்லாந்தும் பொதுவான விஷயங்கள் ஏராளமானவற்றை பகிர்ந்துகொண்டிருக்கின்றன. இருவருக்கும் பொதுவான காலனித்துவ வரலாற்றை நாம் ஒப்பீடு செய்துகொள்ளலாம். நம்முடைய சட்டங்கள் பொதுவாக புனிதமானவை. இந்திய அரசியல் சட்டத்தில் அரசு கொள்கைகள் பற்றிய வழிகாட்டும் நெறிமுறைகள் ஐரீஷ் அரசியலமைப்புச் சட்டங்களின் பாதிப்பில் உருவாக்கப்பட்டவை.

ஜியாலஜிக்கல் சர்வே ஆப் இந்தியா, இந்தியாவின் மொழிகள் பற்றிய முதல் சர்வே போன்ற நிறுவனங்களை ஐரிஷ் நிபுணர்கள் தந்துள்ளனர். இன்று இந்தியாவில் விளையாட்டு சாதனங்களை உருவாக்குகிறவர்கள் ரக்பி மீது அயர்லாந்திற்கு இருக்கும் மோகத்தை தக்கவைத்துள்ளார்கள்.

கவி ரவீந்திரநாத் தாகூருக்கும் டபிள்யூ பி. யீட்சுக்கும் இருந்த நட்பு, ஆன்மிகத்தில் நிவேதிதா இந்தியாவுக்கு ஆற்றிய பங்களிப்பு என ஐரிஷ் மக்களும் இந்தியர்களும் நீண்டகாலமாக அழுத்தமான நட்புறவையும் இணக்கத்தையும் வைத்துள்ளார்கள்.

இன்று, 26 ஆயிரம் இந்தியர்கள் ஐரிஷ் சமூகத்துடன் துடிப்பான பகுதியாக பங்கை வகிக்கிறார்கள். ஏர் இந்தியா கனிஷ்கா விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் இங்கேதான் ஆத்மா சாந்தியடைந்துள்ளார்கள். அந்த விபத்தின் 30 வது ஆண்டு நினைவு இது. மீண்டும் ஒரு முறை, அவர்களை கவுரவிக்கும் வகையிலான நினைவிடத்திற்காக நாங்கள் உங்களுக்கு நன்றி சொல்கிறேன்.

அவர்களுடைய மறையாத நினைவுகளின் வலியில், நாம் மீண்டும் அந்த உறவை நினைத்துப்பார்க்கிறோம். நம்முடைய மதிப்பீடுகள், விருப்பங்கள் மற்றும் சவால்களை இன்று நாம் எதிர்கொள்கிறோம்.

நெருங்கிய கூட்டுறவையும் ஒத்துழைப்பையும் இந்தியாவும் அயர்லாந்தும் தேடுகிறது. ஆசியா மற்றும் ஐரோப்பியாவில் இந்தியாவும் அயர்லாந்தும் பொருளாதாரத்தில் வேகமாக வளரக்கூடிய நாடுகளில் ஒன்றாக இருக்கின்றன.

சர்வதேச மற்றும் பிராந்திய அளவில் ஸ்திரத்தன்மையற்ற நி்லையிலும், இரு நாடுகளுக்கு இடையிலான வணிகம் மற்றும் முதலீடுகளில் கூட்டு முயற்சிகள் வளர்ந்துவருகின்றன.

தகவல் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம் மற்றும் மருந்து தயாரிப்பு, விவசாயம் மற்றும் தூய மின்சக்தி ஆகியவற்றில் நம்முடைய பொருளாதார கூட்டு, அழுத்தமான தொழில்நுட்ப கவனம் கொண்டிருக்கிறது.

இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு ஒப்பந்தங்கள் இந்தியாவின் வர்த்தக விருப்பங்கள் மற்றும் சவால்களுக்கு உதவியாக இருக்கும்.

தற்போதைய டிஜிட்டல் காலத்தில் இந்தியா மற்றும் அயர்லாந்து இடையிலான நட்புறவு நல்ல முன்னேற்றத்தைத் தரும். தகவல் தொழில்நுட்பத்தில் இரு நாடுகளுக்கான ஒத்துழைப்பு குறித்து விரைவில் திட்டம் வகுக்கப்படும்.

இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தேவைகளைப் பொருத்த அளவில், அயர்லாந்தின் விசா கொள்கை முக்கியமானதாக இருக்கப் போகிறது என்று நான் நம்புகிறேன். சமூகப் பாதுகாப்பு ஒப்பந்தத்தை உருவாக்குவதில் ஆர்வமாக உள்ளோம். இரு நாடுகளின் பணியாளர்களுக்கும் அது உதவியாக அமையும்.

விரைவில் இரு நாடுகளுக்கு இடையே நேரடி விமான சேவை தொடங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இது நம்முடைய வர்த்தகத் தொடர்பை மட்டும் ஊக்குவிக்காது, சுற்றுலாத்துறைக்கு மிகப்பெரிய ஊக்கமாக அமையும். ஏற்கெனவே சுற்றுலா வளர்ச்சி 14 சதவிகிதமாக இருந்துவருகிறது.

அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கல்வி மற்றும் இரண்டு பகுதிகளில் நமக்கிடையே நல்ல உறவுக்கான வரலாறு இருக்கிறது. நாம் இன்னும் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது. கர்நாடாகவில் உள்ள அறிவியல் மையம் அந்த நட்புறவுக்கான மிகச்சிறந்த உதாரணம்.

ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள தீவிரவாதம், தீவிரப்போக்கு, சூழ்நிலை மற்றும் சர்வதேச சவால்களைப் பற்றி கருத்துக்களை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இரு நாடுகளுக்கு இடையே சர்வதேச ரீதியிலான அமைதி, நிலைத்தன்மை மற்றும் ஜனநாயக நெறிமுறைகள் பற்றிய முக்கியத்துவத்தைப் பற்றியதாக நம்முடைய உரையாடல்கள் அமையவேண்டும்.

இந்த நிலையில், 21ம் நூற்றாண்டில் இந்த சவால்களை எதிர்கொள்வதில் ஐநா சபை மற்றும் அதன் பாதுகாப்பு கவுன்சிலின் பங்கு பற்றி நாம் கலந்து ஆலோசிக்கவேண்டும். அமைதி நடவடிக்கைகளில் இந்தியாவும் அயர்லாந்தும் இணைந்து செயல்படுகின்றன.

நிலையான வளர்ச்சிக்கான குறிக்கோள்களை வைத்திருக்கும் அயர்லாந்து தலைவர்களுக்கு நன்றி சொல்கிறேன்.

ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதற்கு, குறிப்பாக ஐநாவின் 70வது ஆண்டில், அரசுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமான முடிவுக்குவர அயர்லாந்தின் ஆதரவைக் கோருகிறேன்.

பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தரமான இடத்தை கிடைக்க அயர்லாந்து ஆதரவை கோருகிறேன்.

இந்தியாவும் அயர்லாந்தும் அமைதியை விரும்பும் நாடுகள். இரு நாடுகளும் அணு ஆயுத ஆதிக்கத்திற்கு எதிராக முன்னணியில் இருக்கின்றன. இந்த விஷயத்தில் அயர்லாந்தின் அழுத்தமான, கொள்கைரீதியான நிலையை மதிக்கிறேன். சுதந்தர காலகட்டத்தில் இருந்தே அணு ஆயுதக் குறைப்புக்கான முன்னணி குரலாக இந்தியா இருந்துவருகிறது. நாங்கள் இன்னும் அழுத்தமாக அந்த குறிக்கோளில் உறுதியாக இருக்கிறோம். அணுஆயுத ஆதிக்கத்திற்கு எதிராக எங்களுடைய ஆதாரங்களும் ஆவணங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன. .

2008 ம் ஆண்டின் அணு விநியோகக் குழுமத்தில் இருந்து இந்தியாவிற்கு என பிரத்யேகமாக குறிப்பிட்ட விலக்கு அளிக்க அயர்லாந்தின் ஆதரவு முக்கியமானது. இந்தியாவின் பெருகிவரும் எரிசக்தி தேவையால், அது நிலையான வளர்ச்சிப் பாதைக்கான மிகப்பெரிய வாய்ப்பை ஏற்படுத்தும்.

சர்வதேச ஏற்றுமிதி கட்டுப்பாடு அமைப்பு மற்றும் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா உறுப்பினர் ஆவதற்கு அயர்லாந்தின் ஆதரவை வேண்டுகிறேன்
இந்தியாவின் உறுப்பினர் வாய்ப்பு நமக்கு இடையிலான இருநாட்டு ஒத்துழைப்புக்கும் அணு ஆயுதப் பெருக்கத்திற்கு எதிரான முயற்சிக்கும் வலுவூட்டும்.

பிரதமர் அவர்களே, இந்த உறவின் வலிமையை உணர்ந்துகொள்ள இரு நாடுகளும் கூடுதல் முதலீடு செய்யவேண்டும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். அயர்லாந்துடன் ராஜாங்கரீதியான உறவை அமைத்துக்கொள்ளும் ஆசியாவின் முதல் நாடாக இந்தியா இருக்கிறது. உங்களுடைய ஆசிய தூதராக நாங்கள் இருப்போம். ஐரோபாப்பா மர்றும் அட்லாண்டிக் பகுதிகளை இணைக்கும் பாலமாக அயர்லாந்தைப் பார்க்கிறேன்.

உங்களுடைய உபசரிப்புக்கு மீண்டும் ஒரு முறை நன்றி சொல்கிறேன். பல ஆண்டுகளுக்கு முன் இந்தியாவுக்கு வந்திருக்கிறீர்கள். விரைவில் உங்களை இந்தியாவில் பார்க்க விரும்புகிறேன்.

நன்றி.

***