Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் நாளை வாரணாசி பயணம்


பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை வாரணாசிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

வாரணாசிக்கு சென்று அடைந்ததும், வாரணாசி ரிக்ஷா சங்கத்தினர் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். பிரதமர் மக்கள் நிதி திட்டத்தின் கீழ் 602 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். 501 ரிக்ஷாகளையும் 101 மின் ரிக்ஷாகளையும் அவர் விநியோகிக்க உள்ளார். சூரிய ஒளியில் இயங்கும் 1000 விளக்குகளை தள்ளு வண்டி மற்றும் தெருவோர வியாபாரிகளுக்கு பிரதமர் வழங்க உள்ளார். பயனாளிகளிடம் பிரதமர் உரையாற்ற உள்ளார்.

அதன் பின்பு டி.எல்.டிபுள்யூ மைதானத்தில் நடைபெற உள்ள பொதுக் கூட்டத்தின் போது ஒருங்கிணைந்த மின் வளர்ச்சி திட்டத்தை பிரதமர் துவக்கி வைக்கிறார். உள்கட்டமைப்பு திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்ட உள்ளார். பனாரஸ் இந்து பல்கலைகழகத்தின் காய சிகிச்சை மையத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ள அவர், ராம் நகர் அஞ்சல் அலுவலகத்தில் ரயில்வே முன்பதிவு வசதியை ரிமோட் கண்டிரோல் மூலம் துவக்கி வைக்க உள்ளார்.

******