பி.எம்.இந்தியா
மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் திரு ஏக்நாத் ஷிண்டே எழுதியுள்ள கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
இக்கட்டுரையில் பிரதமர் மோடியின் 25 ஆண்டுகால பொது வாழ்க்கை சேவை, வளர்ச்சி, நாட்டைக் கட்டமைத்தல் ஆகியவற்றை பிரதிபலிப்பதாக திரு ஏக்நாத் ஷிண்டே குறிப்பிட்டுள்ளார். குஜராத் முதல் தில்லி வரை உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், மக்களின் நலவாழ்வு, கலாச்சாரப் பாரம்பரியம் ஆகியவற்றின் மீதான கவனம் இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தை வடிவமைத்துள்ளதை இது எடுத்துரைக்கிறது. மேலும், வலுவான, தற்சார்பு இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையுடன், வளர்ச்சியடைந்த இந்தியா 2047 என்ற இலக்கை அடுத்தகட்டம் நோக்கியுள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
“பிரதமர் திரு நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால பொது வாழ்க்கை சேவை, வளர்ச்சி, நாட்டைக் கட்டமைத்தல் ஆகியவற்றை பிரதிபலிப்பதாக மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் திரு ஏக்நாத் ஷிண்டே குறிப்பிட்டுள்ளார்.
குஜராத் முதல் தில்லி வரை உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், மக்களின் நலவாழ்வு, கலாச்சார பாரம்பரியம் ஆகியவை இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தை வடிவமைத்துள்ளது.
வலுவான, தற்சார்பு இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையுடன் வளர்ச்சியடைந்த இந்தியா 2047 என்ற இலக்கை அடுத்தகட்டம் எதிர்நோக்கியுள்ளது”.
***
(Release ID: 2320513)
AD/IR/SM/SU
PM @narendramodi's 25 years in public life reflect a journey of service, development and nation-building, writes Maharashtra Deputy CM Shri @mieknathshinde. From Gujarat to Delhi, the focus on infrastructure, technology, welfare and cultural heritage has shaped India's development journey. The next phase looks towards Viksit Bharat 2047, with a vision of a stronger and self-reliant India.
— PMO India (@PMOIndia) October 8, 2026