Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரபல குஜராத்தி இசையமைப்பாளர் கௌரங் வியாஸ் மறைவுக்குப் பிரதமர் இரங்கல்


குஜராத்தி இசை உலகின் பிரபல இசையமைப்பாளராகத் திகழ்ந்த கௌரங் வியாஸ் மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தமது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

தனது தந்தையான அவினாஷ் வியாஸின் செழுமைமிக்க இசைப் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் சென்ற கௌரங் வியாஸ் குஜராத்தி இசையில் தனக்கென ஒரு தனித்துவமிக்க இடத்தைப் பிடித்திருந்தார் என்று பிரதமர் கூறியுள்ளார். மேலும் ஒரு திறமைமிக்கப் படைப்பாளியைக் குஜராத் இழந்துள்ளதாகவும், குஜராத்தி இசைக்கு அவர் ஆற்றிய விலைமதிப்பற்ற பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

கௌரங் வியாஸின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தித்த பிரதமர், அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்துச் சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பகிர்ந்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2306240&reg=3&lang=1

***

SS/IR/GS/SU