Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பீகாரின் லக்கிசராயில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பு ஏற்பட்டது குறித்து பிரதமர் வருத்தம் தெரிவித்துள்ளார்


பீகாரின் லக்கிசராயில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்த துயரமான தருணத்தில் தனது எண்ணங்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மீது இருப்பதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் பிரதமர் கூறியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் நிர்வாகம் விரைந்து உதவி செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது;

“பீகாரின் லக்கிசராயில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழப்பு ஏற்பட்டது மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்தத் துயரமான தருணத்தில் எனது எண்ணங்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மீது உள்ளது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் நிர்வாகம் உதவி செய்து வருகிறது.”

***

Release ID: 2300333

SS/IR/LDN/KR