Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

புதுதில்லி விஞ்ஞான்பவனில் நடைபெற்ற மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் மாநாடு 2018-ல் பிரதமர் ஆற்றிய உரை


எனது அமைச்சரவை சகாக்கள் கனரகத் தொழில் மற்றும் பொது நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.ஆனந்த் கீதே, இணை அமைச்சர் திரு. பாபுல் சுப்ரியோ, எனது சகாக்கள் திரு. பி.கே.மிஸ்ரா மற்றும் திரு பி.கே.சின்ஹா, நாடு முழுவதும் இருந்து வந்துள்ள மத்தியப் பொதுத்துறை நிறுவனங்களின் மூத்த அதிகாரிகளே, தாய்மார்களே, பண்பாளர்களே.

பொதுத்துறை நிறுவனங்கள் எனும் சிறிய உலகில் இது ஒரு புதிய தொடக்கமாகும். மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் மாநாட்டுக்கு வந்துள்ள உங்கள் அனைவரையும் நான் வரவேற்கிறேன். உங்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது விடாமுயற்சி, உற்சாகம் மற்றும் கடந்த ஒன்றரை மணி நேரத்தில் நீங்கள் தெரிவித்த தெளிவான கருத்துக்களை நான் கேட்டுக் கொண்டிருந்தேன். பெருநிறுவன ஆளுமை முதல் கண்டுபிடிப்பு வரையிலும், தொழில்நுட்பம் மற்றும் புதிய இந்தியா தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்த உங்களது தொலைநோக்கு மற்றும் சிந்தனைகளை அறிந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இது போன்ற வாய்ப்பை எனக்கு முந்தைய பிரதமர்கள் யாரும் பெற்றார்களா என்று எனக்குத் தெரியவில்லை!

உங்களது துறைகளில் மாற்றத்தை ஏற்படுத்த நீங்கள் ஏராளமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறீர்கள். நானும் எனது சிந்தனைகள் சிலவற்றை உங்களது விவாதங்களுடன் இணைப்பதன் மூலம், உங்களுக்கும் எனக்கும், சமமான சிந்தனை ஏற்பட வழிவகுக்கும். ஆலோசனை மற்றும் விவாதங்களில் ஒருவர் மற்றவர்களது நடவடிக்கைகளுக்கு ஏதாவது பங்களிப்பை வழங்க முடியும்.

நீங்கள் எதிர்கொள்ளும் அன்றாட சவால்கள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும். இந்த சிக்கல்களை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை அரசு அயராது மேற்கொண்டு வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில், பொதுத் துறை நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட ஏதுவாக அவற்றுக்கு செயல்பாட்டு சுதந்திரத்தை அரசு வழங்கி உள்ளது.

நண்பர்களே,

நாடு சுதந்திரம் அடைந்த பின் தேசத்தை நிர்மாணிப்பதற்கான நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பொதுத்துறை நிறுவனங்கள் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பை வழங்கியுள்ளன. அந்தக் காலக்கட்டத்தில் பல்வேறு துறைகளிலும், இந்தியாவிற்கு நிதி, தொழில்நுட்பம் மற்றும் முதலீடுகள் தேவைப்பட்டது. ஆனால் இவற்றைப் பெறுவது எளிதானது அல்ல. எனவே, இந்தத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு பொதுத்துறை நிறுவனங்கள் பெரிதும் உதவிகரமாக இருந்தன. ஏராளமான தரமான பொருட்கள், உற்பத்தி செய்யப்பட்டன. மின் உற்பத்தி, மின் உற்பத்திக்கான சாதனங்களை வடிவமைத்தல், எஃகு உற்பத்தி, எண்ணெய், தாதுக்கள், நிலக்கரி போன்ற பல்வேறு துறைகளில் பொதுத்துறை நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. தனியார் தொழில்நிறுவனங்கள் பெருமளவில் இல்லாத நேரத்தில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தியது பொதுத்துறை நிறுவனங்கள்தான். இன்றும் கூட நீங்கள் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதோடு, தொழில் நடவடிக்கைகளுக்கு உந்து சக்தியாகவும் திகழ்கிறீர்கள்.

கூடுதல் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற இணையதளத்தைக் காணவும்.