பி.எம்.இந்தியா
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் இந்தியா-ஸ்பெயின் ஒத்துழைப்புக்காக, இந்தியா மற்றும் ஸ்பெயின் இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், ஸ்பெயினில் மே 30, 2017-ல் கையெழுத்தானது.
இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவும். இதன்மூலம், தகவல் தொகுப்புகள் மற்றும் நிபுணத்துவம் பரிமாறிக் கொள்ளப்படும்.
பரஸ்பரம் சமத்துவமாக பயனளித்தல் மற்றும் எதிரெதிர் தரப்பில் பயனளித்தல் என்ற அடிப்படையில், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விவகாரங்களில் இருதரப்பு தொழில்நுட்ப ஒத்துழைப்பை ஏற்படுத்தவும், ஊக்குவிக்கவும் ஒருங்கிணைந்த அமைப்புரீதியான அடிப்படையை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இருதரப்பும் செயல்படும். ஒத்துழைப்புக்கான பகுதிகள் தொடர்பான விவகாரங்கள் குறித்து மறுஆய்வு, கண்காணிப்பு மற்றும் ஆலோசனை நடத்த கூட்டுப் பணிக் குழுவை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் வழிவகை செய்கிறது.
****