பி.எம்.இந்தியா
புதுப்பிக்கப்படக் கூடிய எரிசக்தி தொடர்பாக சான் ஜோஸ் நகரில் எரிசக்தி நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலகர்களும், நிபுணர்களும் கலந்து கொண்ட கூட்டத்தில் பிரதமர் கலந்து கொண்டார்.
இக்கூட்டத்தில் அமெரிக்க எரிசக்தித் துறை செயலர் டாக்டர் எர்னெஸ்ட் மோனிஸ் அவர்களும், முன்னாள் எரிசக்தித் துறை செயலர் பேராசிரியர் ஸ்டீவன் ச்சு அவர்களும் பங்கேற்றனர்.
சன் எடிசன் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் அகமது சட்டில்லா, சாஃப்ட் பேங்க் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் நிகேஷ் அரோரா, ப்ளும் எனர்ஜி நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் ஜோனாத்தன் வுல்ஃப்ஸன், சோலாஸைம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் ஜான் டூயர், டிபிஎல் பார்ட்னர்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஐரா எரன்ப்ரீஸ் ஆகியோர் உள்ளிட்ட எரிசக்தித் துறையில் முதலீடு செய்யும் நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் அருண் மஜும்தார், ரோஜர் நோல், அஞ்சனி கோச்சார் மற்றும் சாலி பென்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தூய்மையான எரிசக்திக்கான உலகத் தலைகராக மாறும் வல்லமையை இந்தியா கொண்டுள்ளது என்று அக்கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்ப்டடது. மின்சாரத்தை சேமித்து வைக்கும் கருவிகள் விரைவில் மலிவாகும் காரணத்தால், விலை குறைந்த எரிசக்தி விரைவில் அனைவருக்குமானதாகும் என்று கூறப்பட்டது. குறைந்த விலை எரிசக்தியை உற்பத்தி செய்யும் அனுமதி, மாநிலங்களுக்கும் நகரத்துக்கும் அளிக்கப் பேட வேண்டும் என்று கூறப்பட்டது. தற்போது உள்ள மின் கடத்திகள் 175 ஜிகாவாட் மின்சாரத்தை கடத்துவதற்கு ஏதுவானதாக இல்லை என்பதால், அந்த சக்தியை அதிகரிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கருத்து தெரிவிக்கப்பட்டது. இஸ்ரேல் நாடு தங்களது குடிநீர் தேவையை தனியாரின் பங்கெடுப்போது சீர் செய்தது போல, 175 ஜிகா வாட் மின்சக்தியை உற்பத்தி செய்வதிலும், தனியாரின் பங்களிப்பு அவசியம் என்பது வலியுறுத்தப்பட்டது.
தொழில்நுட்பம், ஒருங்கிணைவு, நிதி மற்றும் சட்டதிட்டங்கள் ஆகியவற்றை இந்தியா சரி செய்ய வேண்டும். இந்தியாவின் மின் பகிர்மான நிறுவனங்களின் நிதி நிலைமை கவலை அளிக்கும் வகையில் உள்ளது என்பதும் தெரிவிக்கப்பட்டது.
பல்வேறு நிறுவனங்களின் தலைமைச் செயல் அலுவலர்கள் அவர்கள் நிறுவனத்தில் பயன்படுத்தப்படும் புதிய தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகள் குறித்து தெரிவித்தனர். சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின்சக்தியோடு இணைந்து, பயோமாஸ் எரிசக்தியும் சுத்தமான எரிசக்தி அளிப்பதற்கு உதவும் என்று தெரிவித்தனர்.
அந்நிகழ்சியில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர், 175 ஜிகா வாட் மின்சாரத்தை, சுத்தமான எரிசக்தியாக தயாரிப்பதற்கான இந்தியாவின் உறுதியை தெரிவித்தார். இத்துறையில் முதலீட்டுக்கான பலமான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரிவித்த பிரதமர் 100 சதவிகித அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்ட ரயில்வேயை உதாணமாக சுட்டிக் காட்டினார். மின் பகிர்மான நிறுவனங்களின் நிதி நிலைமை குறித்து இந்திய அரசு கவனித்து வருவதாகவும் தெரிவித்தார்.
புதுப்பிக்கப்படக் கூடிய எரிசக்தியில் இந்தியா செலுத்தி வரும் கவனத்தையும், சுட்டிக்காட்டினார் பிரதமர். கொச்சி விமான நிலையம் முழுமையாக சூரிய ஒளியில் இயங்குவதை சுட்டிக்காட்டினார். ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு மாவட்ட நீதிமன்றம், முழுமையாக சூரிய ஒளியில் இயங்குவதை சுட்டிக்காட்டிய பிரதமர், குஜராத்தில் ஒரு கால்வாய் மீது அமைக்கப்பட்டுள்ள சோலார் பேனல்கள் குறித்தும் பேசினார். நிலக்கரியை எரிவாயுவாக மாற்றுவது குறித்தும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதாக பிரதமர் கூறினார். அடுத்த பத்தாண்டுகளுக்குள், புதுப்பிக்கப்படக் கூடிய எரிசக்தியில் ஒரு புரட்சி ஏற்பட உள்ளது என்றும் கூறினார்.
Had fruitful discussions with @Energy Secretary, Mr. @ErnestMoniz on renewable energy & other issues. pic.twitter.com/0LpFy7zb48
— Narendra Modi (@narendramodi) September 28, 2015
Attended a roundtable on renewable energy with top CEOs and experts from energy sector. http://t.co/XAqUkApoCu pic.twitter.com/PBnAgloCeo
— Narendra Modi (@narendramodi) September 28, 2015