பி.எம்.இந்தியா
2018 மார்ச் 10ம் தேதி புதுதில்லியில் புதுப்பிக்கவல்ல எரிசக்தி துறையில் இந்தியாவும் ஃபிரான்சும் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு புதுதில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பிந்தைய ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பரஸ்பரம் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் இந்தியாவின் தேசிய சூரிய மின்சக்தி நிறுவனமும்ஃபிரான்சின் கமிசரியட் அல் எனர்ஜி நிறுவனமும் ஆராய்ச்சி/செயல்விளக்கம் /முன்னோடி திட்டங்களை அடையாளம் காண்பதை இரு தரப்பும் நோக்கமாக கொண்டுள்ளன. பரஸ்பர உடன்படிக்கை அடிப்படையில் இரு தரப்பும் சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டணி உறுப்பு நாடுகளில் முன்னோடி திட்டங்களை நடைமுறைப்படுத்தி ஈடுபடுத்தும். கூட்டு ஆராய்ச்சி திட்டங்கள், கூட்டு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி, கூட்டு பயிலரங்குகள், நிபுணர்கள் பரிமாற்றம் உள்ளிட்ட ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் தகவல் கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு வழிகளில் கூட்டணி ஏற்படக்கூடும்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும்.
***