Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

புத்தாண்டு பண்டிகை – நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து


நாடு முழுவதும் புத்தாண்டு கொண்டாடப்படுவதை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி நாடு முழுவதும் உள்ள குடி மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில், வரும் புத்தாண்டு அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் செழிப்பை வழங்கட்டும் என்று வாழ்த்தி உள்ளார்.

நாடு முழுவதும் மக்கள் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துகள். இந்த புத்தாண்டு அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் செழிப்பை வழங்கட்டும்.

புத்தாண்டு மற்றும் நவராத்திரியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு கோடானு கோடி வாழ்த்துக்கள். புத்தாண்டு நம் அனைவர் வாழ்விலும் மகிழ்ச்சி மற்றும் நலனை வழங்கட்டும்.

மணிப்பூரில் உள்ள எனது சகோதர சகோதரிகளுக்கு சஜிபூ சீயரோபா வாழ்த்துகள். புத்தாண்டு மகிழ்ச்சியாகவும் நல்லிணக்கத்துடன் அமைய வாழ்த்துகள்.

நவ்ரே பண்டிகையை கொண்டாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இந்த ஆண்டு நல்ல எண்ணங்களுடனும் சிறந்த ஆரோக்கியத்துடனும் அமையட்டும்.

உகாதி பண்டிகை கொண்டாடும் அனைவருக்கும் உகாதி வாழ்த்துகள். இந்த புத்தாண்டு உங்களின் அனைத்து எண்ணங்களையும் நனவாக்கி, அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கட்டும்.

சிந்தி சமூகத்தினருக்கு ‘செட்டி சாந்த்’ வாழ்த்துகள். இந்த புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியானதாக அமைய இறைவன் ஜீலேலால் நமது அனைவரையும் ஆசிர்வதிக்கட்டும்.

‘குடி பட்வாவை’ முன்னிட்டு மகாராஷ்டிரா மக்களுக்கு எனது வாழ்த்துகள். இந்த புத்தாண்டு மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்பை அளிக்கட்டும் என்று பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

*****