Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

புத்தாண்டை முன்னிட்டு கொண்டாடப்படும் பல்வேறு பண்டிகைகளையொட்டி பிரதமர் வாழ்த்து


புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் கொண்டாடப்படும் பல்வேறு பண்டிகைகளையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் புத்தாண்டை கொண்டாடும் மக்களுக்கு எனது வாழ்த்துகள். இந்தப் புத்தாண்டு மகிழ்ச்சியையும் செழிப்பையும் வழங்கட்டும்.

செட்டி சந்தை முன்னிட்டு எனது சிந்தி நண்பர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாம் அனைவரும் ஜூலால் தெய்வத்திடம் தலை வணங்கி அவரின் புனிதமான ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்வோம்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் குடி படுவா வாழ்த்துகள் இந்தப் புத்தாண்டு மகிழ்ச்சியாகவும் வெற்றிகரமாகவும் அமைய பிரார்த்திக்கிறேன்.

யுகாதியை முன்னிட்டு அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இந்தப் புத்தாண்டு நமது சமூகத்தில் அமைதியையும் செழிப்பையும் கொண்டு வரும் என்று நம்புகிறேன்.

நாட்டு மக்களுக்கு எனது நவ்ரே வாழ்த்துக்கள். வரும் ஆண்டு நமது வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் நல்லிணக்கத்தையும் மேம்படுத்த வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்.

மணிப்பூர் மாநிலத்தின் அருமையான மக்களுக்கு எனது சஜிபூ ஷிரோபா வாழ்த்துக்கள். இந்தப் புத்தாண்டு உங்களின் அனைத்துக் கனவுகளையும் நினைவாக்கட்டும் என்று பிரதமர் கூறியுள்ளார்.