Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

புவியியல், சுரங்கம் மற்றும் தாது வளங்கள் துறையில் ஒத்துழைப்புக்கு இந்தியா-ஜிம்பாப்வே இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்


புவியியல், சுரங்கம் மற்றும் தாது வளங்கள் துறையில் ஒத்துழைப்புக்கு இந்தியா-ஜிம்பாப்வே இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜிம்பாப்வேயின் ஹராரேயில் நவம்பர் 3, 2018 அன்று கையெழுத்தானது.

முக்கிய அம்சங்கள்

வளங்கள், சட்டங்கள், கொள்கை பற்றிய தகவல் பரிமாற்றம், மேம்பாட்டு உத்திகள் குறித்த கருத்துக்களைடப் பரிமாறிக்கொள்ள கருத்தரங்குகள் நடத்துதல், இருநாடுகளுக்கும் இடையே தொழில்நுட்பப் பரிமாற்றங்களை ஊக்கப்படுத்துதல், சுரங்கங்கள் துறையில் முதலீட்டுக்காக மதிப்புக்கூட்டுதல் மற்றும் வாய்ப்புகளை மேம்படுத்துதல் ஆகியவை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கங்களாகும். இந்த அம்சங்கள் ஆவணப்படுத்துதல், பரவலாக்குதல் போன்ற செயல்பாடுகளை மேற்கொள்ளவும் புதிய கண்டுபிடிப்புக்கான நோக்கத்தை நிறைவேற்றவும் பயன்படும்.
பயன்கள்

அடையாளம் காணப்பட்ட துறைகளில் ஒத்துழைப்பதற்கு இந்தியா-ஜிம்பாப்வே இடையே நிறுவன அமைப்பு முறையை உருவாக்க இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வழிவகுக்கும்.

******

எஸ்எம்பி – உமா