Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பெங்களூரில் நடைபெற்ற தசம சவுந்தரிய லஹரி பாரயணோத்சவா மகாசமர்ப்பண நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை

பெங்களூரில் நடைபெற்ற தசம சவுந்தரிய லஹரி பாரயணோத்சவா மகாசமர்ப்பண நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை

பெங்களூரில் நடைபெற்ற தசம சவுந்தரிய லஹரி பாரயணோத்சவா மகாசமர்ப்பண நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை

பெங்களூரில் நடைபெற்ற தசம சவுந்தரிய லஹரி பாரயணோத்சவா மகாசமர்ப்பண நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை


மேன்மைக்குரிய ஆளுமை கொண்டவர்களே, வேதாந்த பாரதியைச் சேர்ந்த சீமான்களே, சீமாட்டிகளே,

ஓர் இடத்தில் ஒரே குரலாக எப்போது ஒரு மந்திரத்தை உச்சரித்தாலும், வலிமையான ஒரு சக்தி மனதையும் உடலையும் ஆன்மாவையும் நிறைவிக்கிறது என்பது பழங்கால நம்பிக்கை. அந்த அடிப்படையில் தான் நாத பிரம்மம் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. மந்திரங்கள் உச்சரிப்பதன் வலிமையை நவீன அறிவியலும் கூட மறுக்கவில்லை. இன்றைக்கு இந்தச் சூழலில் தட்சிணாமூர்த்தி மற்றும் சவுந்தரிய லஹரி அற்புத மந்திரங்கள் காரணமாக அதே சக்தியை என்னால் உணர முடிகிறது. இந்தத் தெய்வீக உணர்வு அமிழ்தம் மட்டுமன்றி, கடவுளுடன் ஐக்கியமாவது என்ற தீராத ஆசையையும் மற்றும் புதிரையும் கொண்டதாகவும் இருக்கிறது.

     ஒவ்வொரு சவுந்தர்ய லஹரி மந்திரமும் வெவ்வேறு சக்தி மற்றும் வெவ்வேறு உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக உள்ளன. அந்த உத்வேகமும், வலிமையும் புதிய சிந்தனை, புதிய சக்தியுடன் இந்தத் தருணத்தில் நம்மை முழுமை அடையச் செய்கின்றன. பல ஆண்டுகளாக நவராத்திரியுடன் நான் தொடர்பு கொண்டவனாக இருக்கிறேன் என்பதிலும், எனது நவராத்திரி கொண்டாட்டங்களில் சவுந்தர்ய லஹரியும் ஓர் அங்கமாக இருக்கிறது என்பதிலும் நான் ஓர் அதிர்ஷ்டசாலியாக இருக்கிறேன்.

     மகாகனம் பொருந்திய ஸ்ரீ ஸ்ரீ ஷங்கர் பாரதி மகாசுவாமி ஜி –அவர்களைப் பணிந்து, வேதாந்த பாரதிக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்ள நான் விரும்புகிறேன். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அவர்கள் எனக்கு அழைப்பு விடுத்தார்கள். பயனுள்ள நேரத்தை இங்குச் செலவிடும் வாய்ப்பையும் எனக்கு அளித்தார்கள். ஸ்ரீ ஸ்ரீ பாரதி மகாசுவாமி ஜி அவர்கள் மூலமாகச் சவுந்தர்ய லஹரியின் பாடங்களை அனுபவித்திடும் வாய்ப்பு கிடைத்திருப்பது எனது அதிர்ஷ்டம். சுவாமி ஜி -யின் ஆசிர்வாதங்களுடன் சவுந்தர்ய லஹரி 10 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது.

     உங்கள் அனைவருக்கும் பாராட்டுகளையும் என்னுடைய வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் புனிதமான பணியில் பங்கெடுத்துக் கொண்டிருப்பதன் மூலம் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைத்திருக்கிறது என்று நான் நம்புகிறேன். சகோதர, சகோதரிகளே, 8 முதல் 10 நாட்களுக்கு முன்பு நான் கேதார்நாத் சென்றிருந்தேன். கோவிலின் கதவுகள் மூடப்பட இருந்தன. மகாதேவ் ஜி அவர்களுக்கு மரியாதை செலுத்தும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. நான் எப்போது கேதார்நாத் சென்றாலும், தொடர்ந்து என் மனதில் ஒரு கேள்வி எழுந்துகொண்டே இருக்கும். அணுக இயலாத இந்த இடத்துக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ஆதிசங்கராச்சார்யா ஜி அவர்கள் எப்படி வந்திருப்பார்?

     நவீனத் தொழில்நுட்பம் மிகுந்த இந்தக் காலத்திலும்கூட, அங்கே செல்வது அவ்வளவு எளிதானதாக இல்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ஆதி சங்கரர் எப்படி அங்கே சென்றிருப்பார்? எந்த அளவற்ற சக்தியும், வல்லமையும் சங்கராச்சாரியாருக்கு உத்வேகம் தந்து 32 வயதுக்குள் நாடு முழுக்க மூன்று முறை பயணம் செய்யவைத்து, நாட்டின் நான்கு மூலைகளிலும் 4 மடங்களை நிறுவச்செய்திருக்கும்? இந்தியாவை ஒரு மலர் மாலையைப் போல கலாச்சார ரீதியில் ஒருங்கிணைப்பு செய்ய அவர் அபரிமிதமான முயற்சிகள் மேற்கொண்டார்.

     நமது ஆன்மிகப் பாரம்பரியங்களை வலுப்படுத்துவதற்காக ஆதிசங்கராச்சார்யா தனது வாழ்நாளை அர்ப்பணித்துக்கொண்டார். நமது பாரம்பரியங்களில் பீடித்திருந்த தவறான அனைத்து விஷயங்களையும் மிக நுணுக்கமாக அவர் ஆய்வுசெய்து, நம்மிடையே இருந்த தீயவற்றை விமர்சனம் செய்யும் துணிச்சலை அந்த இளம்வயதில் அவர் வெளிப்படுத்தினார். சரியான வாதங்களை முன்வைத்த அவர், எதிர்காலத் தலைமுறையினர் தவறான பாதையில் விலகிச் சென்றுவிடாமல் தடுப்பதற்கான எல்லா முயற்சிகளையும் எடுத்தார். சிவன்-சக்தி-விஷ்ணு-கணபதி மற்றும் குமாரனை ஒன்றாக வழிபடுவது என்ற பாரம்பரியத்தின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்திக் கூறினார். இந்தியப் பாரம்பரியத்தை அவர் மீண்டும் ஒரு முறை மறுநிர்மாணம் செய்தார். ஆதிசங்கராச்சார்யா வேதங்கள் மற்றும் உபநிஷதங்களில் உள்ள அறிவார்ந்த விஷயங்களுடன் இந்தியாவை ஒருங்கிணைத்து, அதை ஒற்றுமை உணர்வுடன் சேர்த்துவைத்தார். எழுத்துகளைத் தான் ஒரு தகவல் சாதனமாக அவர் பயன்படுத்தினார். வெவ்வேறு நம்பிக்கை முறைகளிலும், தத்துவங்களிலும் உள்ள நல்ல விஷயங்களைத் தொகுத்து, அறிவார்ந்த மற்றும் ஆன்மிகப் பாதையைப் பின்பற்றுமாறு மக்களுக்கு அவர் உத்வேகத்தை ஊட்டினார். எதிர்காலத் தலைமுறையினருக்காக அவர் சவுந்தரிய லஹரியை உருவாக்கினார். நாட்டில் ஒவ்வொரு சாமானிய மனிதரும் பங்கெடுத்துக்கொள்ளும் வகையில், இது ஓர் அமைப்பு முறையாக மாறிவிட்டது. கடவுளை வழிபடும்போது, வெவ்வேறு வடிவங்களிலான கடவுளருக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை சவுந்தரிய லஹரி உறுதி செய்கிறது.

“ஏகம் சத்விப்ர பஹுதா வேதாந்தி”

     சவுந்தரிய லஹரி மூலம் கிடைக்கும் ஆசிகள் எல்லோருக்கும் எந்தவிதமான பாரபட்சமும் இல்லாமல் பொழியப்படுகிறது. சவுந்தரிய லஹரியின் வரிகளை உச்சரிப்பதன் மூலம் ஒருவர் அறிவு, வளமை, ஆரோக்கியம் என எல்லாவற்றையும் பெறுகிறார் என்று நம்பப்படுகிறது. ஆதிசங்கராச்சாரியாரின் தவம், எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து, அனைவரையும் ஐக்கியப்படுத்தும் கலாச்சாரத்தைக் கொண்ட இந்தியக் கலாசாரத்தின்  அதே வடிவில் இன்னும் தொடர்ந்து வருகிறது. இந்தக் கலாச்சாரம்தான் புதிய இந்தியாவுக்கு அடிப்படையாக உள்ளது; `சப்கா சாத் சப்கா விகாஸ்’ அனைவரும் இணைந்து (அனைவருக்கும் வளர்ச்சி) என்ற மந்திரத்தில் நம்பிக்கை உள்ள கலாச்சாரமாக அது இருக்கிறது.

     சகோதர, சகோதரிகளே, ஆதிசங்கராச்சாரியாவின் போதனைகளை மக்களிடம் பரப்புவதற்காக ஸ்ரீ சங்கர் பாரதி மகாசுவாமிஜி தன் வாழ்நாளை அர்ப்பணித்துக்கொண்டிருக்கிறார். ஒட்டுமொத்த உலகையும் ஒரே குடும்பமாகக் கருதி, ஆதிசங்கரரின் `ஏகாத்மா பவ்’ என்ற போதனை வேதாந்த பாரதி மூலமாக மக்களைச் சென்றடைகிறது. வெவ்வேறு மொழிகள், ஏராளமான வெளியீடுகள் மற்றும் புத்தகங்கள் மூலமாக வேதங்கள் மற்றும் உபநிஷதங்களுடன் அவர்கள் தங்களை இணைத்துக்  கொண்டிருக்கிறார்கள். இந்தப்போக்கில்ள் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நண்பர்களே, ஆன்மிகத்தின் மகத்துவத்தையும், இந்தியாவின் பழங்காலப் போதனைகளையும் மக்கள் அதிகமாகப் படிக்கும்போது, அதன் மூலம் அவர்கள் அதிகமான பலன்களைப் பெறுகிறார்கள். குழப்பத்தில் இருக்கும் மனிதகுலம் மற்றவர்களைவிட தன்னையே  மகத்தானவர் என்று காட்டிக்கொள்வதற்காகப் போராடுவது அல்லது வீடுபேறு அடைவதற்கான மார்க்கம் குறித்துப் போராடுவது போன்ற சிக்கல்களில் சிக்கிக்கொள்கிறது. ஆதிசங்கராச்சார்யா த்வைதா என்பதே அத்வைதா அல்லது ஒருமைநிலை என்ற தத்துவத்தை அளித்தார். இருவேறு நிலைகள் இல்லை என்ற இடத்தில் முரண்பாடுகளுக்கான வாய்ப்பே இல்லாமல் போகிறது. வாழ்க்கையின் பாதையில் தடைகள் ஏற்படும்போதெல்லாம் உலகின் வெவ்வேறு பகுதிகளில் உள்ளவர்கள் இந்தியாவைத்தான் உற்று நோக்குகிறார்கள். இந்த வகையில், உலகின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நமது பாரம்பரியங்கள் மூலமாகத் தீர்வு காண முடியும். நமது வாழ்வில் இந்தப் பாரம்பரியங்களை நாம் மரபுரிமையாகப் பெற்றுவந்திருக்கிறோம்.

 

 सह नाववतु  सह नौ भुनक्तु  

सह वीर्यं करवावहै  तेजस्वि नावधीतमस्तु मा विद्विषावहै  

 शान्तिः शान्तिः शान्तिः 

     ஒவ்வொருவரும் பேணிப்பாதுகாக்கப்படட்டும், ஒவ்வொருவரும் வலிமை பெறட்டும். நான் பேணிப்பாதுகாக்கப்பட வேண்டும், `நான்’ வலிமை பெற வேண்டும் என்று நாம் ஒருபோதும் சொல்வது இல்லை. எல்லோருக்கும் நலன்கள் கிடைத்து, எல்லோரும் வலிமை பெற வேண்டும் என்று கோவில்களில் நாம் வழிபடுகிறோம். இதுதான் நமது பாரம்பரியம். யாரும் மற்றவர்கள் மீது பொறாமை கொள்ளக் கூடாது.

     இன்று இந்தச் சந்தர்ப்பத்தில், வேதாந்த பாரதியின் விசேஷ நிகழ்ச்சியைப் பற்றிக் குறிப்பிட நான் விரும்புகிறேன். விவேகாடிபணி மற்றும் விவேக உர்கர்ஷனி போட்டிகள். ஆதிசங்கராச்சாரியாருடனான  இந்தப் பங்கேற்புகளை, நமது ஆன்மிகப் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தைப் பலவீனப்படுத்த முயற்சிகள் நடந்தன என்பதை மிகச் சிலரே அறிந்திருக்கின்றனர். அதை அழிப்பதற்கு முயற்சிகள் நடந்திருக்கின்றன. ஆனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக யாராலும் இந்த வரலாற்றுப் பெருமைக்கு முடிவு கட்டிவிட முடியவில்லை. அது சொல்கிறது –

 

दीनइलाही का बेबाक बेड़ा, 

नक्शा जिसका अक्सआलम में पहुंचा 

किए पांच सौ पार सातों समुंद्र, 

 अमन में ठिठका  कोई गुलजाम में झिझका 

वो डूबा दोहाब में गंगा के अंदर।। 

இருந்தபோதிலும், நீண்டகாலமாக அடிமைப்பட்டு இருந்த காரணத்தால் நமது ஆன்மிக அறிவு பாதிக்கப்பட்டுவிட்டது. இன்றைக்கு அது பெரும்பாலும் புத்தகங்களுடன் முடிந்துபோகிறது. சில குருமார்களின் வழிகாட்டுதல்தான் பாதுகாப்பானது. சுதந்திரத்துக்குப் பிறகு மேற்கொண்டிருக்க வேண்டிய முயற்சி, மேற்கொள்ளப்படாமல் போய்விட்டது. இன்றைய இளைஞர்கள் அனைத்தையும் தனது செல்போனிலேயே படித்துக் கொள்கிறார் என்றால், புத்தகங்களில் புதைந்துகிடக்கும் பாரம்பரிய அறிவைப் பற்றி அவர்களால் எப்படி அறிந்துகொள்ள முடியும்? இந்த மகத்தான பாரம்பரியம் பற்றி அவர்களுக்கு யார் சொல்லப்போகிறார்கள்? ஆகவே, விவேகாடிபாணி திட்டத்தின் மூலம் பள்ளிக்கூடக் குழந்தைகளுக்கு இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் மாண்புகளைத் தெரிவிப்பதும், விநாடிவினா போட்டி நடத்துவதும் சுவாமிஜியின் பெரியதொரு முயற்சியாகும். எதிர்காலத்  தலைமுறையினருக்கும் இது ஒரு மகத்தான சேவையாகும்.

     இந்தியத் தத்துவங்களைப் பின்பற்றும் எந்தவொரு நபருக்கும் கடைசி இலக்கு வீடுபேறு அடைவதுதான்.  `வியக்தி’ அல்லது கடவுள், `சமஸ்டி’ அல்லது சமுதாயம் மற்றும் `சிரிஷ்தி’ அல்லது பிரபஞ்சம் அல்லது படைத்தல் மற்றும் `பர்மேஷ்டி’ அல்லது `இறைவன்’ என எல்லாமே ஒன்றுடன் ஒன்று பிணைப்பு கொண்டது என வேதங்களும் உபநிஷதங்களும் நம்புகின்றன. அவற்றை நாம் தனித்தனியாகப் பார்க்கவில்லை. ஆனால் ஒருங்கிணைந்த மொத்த அம்சமாகப் பார்க்கிறோம். இந்தத் தத்துவம் பூமியை `அன்னை பூமி’ எனக் கருதுகிறது. பூமி எல்லோருக்கும் உரியது என்றும், பூமிதான் நமது தாய் என்றும் அது கூறுகிறது. இந்தத் தத்துவம்தான் ‘வசுதைவ-குடும்பகம்’ என்பதற்கு வழிவகுத்தது.

     அதேபோல, சவுந்தரிய லஹரியிலும் -““फल: अपिवान्छा समाधिकम” என்ற ஒரு மந்திரம் இருக்கிறது. நாம் கேட்பதைவிட அதிகமாகவே பூமி நமக்குத் தருகிறது என்பது இதன் அர்த்தம். இந்த எளிமையான வார்த்தையில் அவ்வளவு மகத்தான உண்மை சொல்லப்பட்டிருக்கிறது. நம் அனைவருக்கும் போதுமான தண்ணீர், காற்று, ஆறு, தானியங்கள், தாதுக்கள், தோட்டப்பயிர்கள் எல்லாமே இயற்கையிடம் இருந்து கிடைக்கின்றன. இந்த வரப்பிரசாதத்தை நாம் பாதுகாக்க வேண்டியது அவசியம்.

     இந்தச் சிந்தனைதான் நமது பாரம்பரியம். இயற்கையிடம் அத்துமீறி நடந்துகொள்ளக் கூடாது. இயற்கைவளங்களைச்  சமன்பாட்டு அளவில் பயன்படுத்த வேண்டும் என அது வலியுறுத்துகிறது. இயற்கைவளத்தை  அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவது இங்கே குற்றமாகக் கருதப்படுகிறது. `இயற்கையின் பலன்களை’ அனுபவிப்பதற்கு மட்டுமே மனிதனுக்கு உரிமை உள்ளது. நமது பாரம்பரியம் இதை நமக்குக் கற்றுத்தந்திருக்கிறது. எங்களுடைய ஆட்சிமுறை மற்றும் நிர்வாகத்தில் எப்போதும் இதை நீங்கள் பார்க்கலாம்.

     சகோதர சகோதரிகளே, தனக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகிற்குமே நீதி, கண்ணியம், வாய்ப்பு மற்றும் வளமை கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்தியா தொடர்ந்து போராடிவருகிறது. கடந்த ஆண்டு சர்வதேச சூரியச்சக்திக் கூட்டமைப்பு தொடங்கப்பட்டது உங்களுக்குத் தெரிந்திருக்கும். தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் சூரியச்சக்திப் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கு அரசு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டுவருகிறது. இப்போதும்கூட, மத்திய அரசின் திட்டங்களில், இயற்கையைப் பாதுகாப்பது என்ற எண்ணத்தின் அம்சங்களை நீங்கள் காண முடியும். சூரியச்சக்தி மின்சாரம், காற்றாலை மின்சாரம் மற்றும் நீர்மின்சாரத் துறைகளில் நடைபெற்று வரும் அதிக அளவிலான பணிகளை நீங்கள் முன் எப்போதும் கண்டிருக்க மாட்டீர்கள்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஆதாரமாகக் கொண்ட அதிகபட்ச மின் உற்பத்தி விரிவாக்கம் சவுந்தர்ய லஹரியைக் கொண்ட – இந்த நாட்டில்தான் நடைபெறப்போகிறது.

     2030 ஆம் ஆண்டுக்குள் தனது மொத்த மின்உற்பத்தியில் 40% அளவுக்குப் படிமானப் பொருட்களை அடிப்படையாகக் கொள்ளாத எரிபொருள்களை அடிப்படையாகக் கொண்டதாக மாற்றுவதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியா தனது சுதந்திரத்தின் 75வது ஆண்டைக் கொண்டாடும் 2022 ஆம் ஆண்டுக்குள், 175 கிகாவாட் அளவை எட்ட வேண்டும் என்று அரசு விரும்புகிறது. நான் மெகாவாட் பற்றிப் பேசவில்லை. மெகாவாட் என்பதெல்லாம் கடந்த காலமாகிவிட்டது. இன்றைக்கு நாம் கிகா வாட் பற்றிப் பேசுகிறோம்; புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களைக் கொண்ட மின்உற்பத்திக்கான கிகாவாட் பற்றிக் குறிப்பிடுகிறோம். கடந்த 3 ஆண்டுகளில் அரசின் முயற்சிகள் காரணமாக 22000 மெகாவாட்களுக்கும் அதிகமாக, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அடிப்படையாகக் கொண்ட மின் உற்பத்தி நிலையங்கள் உருவாக்கப்பட்டு, மின்தொகுப்பில் சேர்க்கப் பட்டுள்ளன. முந்தைய அரசு தனது கடைசி 3 ஆண்டுகளில் வெறும் 12000 மெகாவாட் அளவுக்கு மட்டுமே புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அடிப்படையாகக் கொண்ட மின்உற்பத்தியை அதிகரிக்க முடிந்தது. தனது கடைசி 3 ஆண்டு காலத்தில் முந்தைய ஆட்சி ரூ.4,000 கோடியை இதற்காகச் செலவிட்டது. நாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு 3 ஆண்டுகளுக்குள் சுமார் ரூ. 11,000 கோடியைச் செலவழித்திருக்கிறோம்.

     இப்போது நமது நாட்டில் மின்உற்பத்தித் திறன் சுமார் 300 ஜெகாவாட் என உள்ளது. நிலக்கரி, நீர், சூரியச்சக்தி, காற்று என அனைத்து வகையான ஆதாரங்களையும் சேர்ந்த மின்உற்பத்தித் திறனாக இது இருக்கிறது. நாட்டில் கிடைக்கும் அனைத்து ஆதார வளங்களையும் முழுமையாகப் பயன்படுத்தினால், சூரியச்சக்தியால் மட்டும் 750 ஜெகாவாட் அளவுக்கு மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்று தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். நமக்குள்ள வசதிகளை நாம் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

     இந்த வகையில் அரசு தடையற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக நாடு முழுக்க சூரியச்சக்தி  பூங்காக்கள் அமைக்கப்படுகின்றன. கட்டடங்களின் கூரையில் சூரிய மின்சக்தி வசதியை ஏற்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் கட்டடங்கள் கட்டுவதற்கான விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன, அரசுக் கட்டடங்களில் சூரியச்சக்தி  மின்நிலையங்களை நிறுவுவதற்குக் குறைந்த வட்டியில் கடன்கள் அளிக்கப்படுகின்றன; சூரியச்சக்தி  மின் நிலையங்களுக்குக் கட்டமைப்பு நிறுவன அந்தஸ்து அளிக்கப் பட்டுள்ளது. இவற்றுக்கு நீண்டகாலக் கடன்கள் அளிக்கப்படுகின்றன. ஒருவகையில், திட்டங்கள் தொடக்கத்துக்கான பகுதியாக பெங்களூர் இருக்கிறது. இங்குள்ள இளைஞர்கள் புதிய சிந்தனைகள் மற்றும் கண்டுபிடிப்புகளில் ஈடுபாடு கொண்டிருக்கிறார்கள். திட்டங்கள் தொடங்குவதில் ஆர்வம் கொண்டிருக்கும் பெங்களூரு இளைஞர்களுக்கு நான் அழைப்பு விடுக்க விரும்புகிறேன். தூய்மையான சமையலுக்கான ஓர் இயக்கத்தை நாம் தொடங்குவோம், வாருங்கள். சூரியச்சக்தி யைப் பயன்படுத்தி, மலிவான மற்றும் கட்டுப்படியாகும் விலையிலான சமையல் அடுப்பை நாம் எப்படி உருவாக்க முடியும்? பழைய மாடல்களில் உள்ள சூரியச்சக்தி  குக்கர்கள், நவீனக்காலக் குடும்பங்களுக்கு ஏற்றதாக இல்லை. எரிவாயுவைப் போன்ற அடுப்பை அவர்கள் விரும்புகிறார்கள். இன்றைக்கு இதுவும்கூடச் சாத்தியம்தான். இன்றைய இளைஞர்களுக்கும், புதிய திட்டங்களுக்கும் இந்தத் துறையில் பெரிய வரவேற்பு காத்திருக்கிறது. தூய்மையான சமையல் என்பது பழைய அன்னையருக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். வனப்பகுதிகளில் வாழும் மக்கள் சமையலுக்கு விறகுக்காகக் காட்டை அழிக்கத் தேவை இருக்காது. அவர்கள் சூரியச்சக்தியைப் பயன்படுத்திச் சமையல் செய்துகொள்வார்கள். தங்கள் பிள்ளைகளுக்கு உணவு சமைக்கும் நேரத்தையும் இது மிச்சப்படுத்தும். நாட்டுக்குப் பயன் தரக்கூடிய அத்தகைய புதுமைச் சிந்தனைகளில் நாம் முயற்சிகள் எடுக்க வேண்டும். அனைவரும் தங்களின் எரிசக்தித் தேவையைத் தாங்களே பூர்த்தி செய்துகொள்ளக் கூடிய ஒரு நிலையை நாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்களும் ஏற்படுத்திக்கொடுக்கும்போது, சமூகத்தில் ஏற்படக் கூடிய மாற்றத்தை நீங்கள் காண முடியும்.

     நண்பர்களே, ஒரு புதிய அணுமுறையால் நாட்டின் பணம் எந்த அளவுக்குச் சேமிக்கப்படுகிறது, சுற்றுச்சூழல் எந்த அளவுக்குப் பாதுகாக்கப்படுகிறது என்பதை உங்களுக்கு எடுத்துக்கூறுவதற்கு நான் விரும்புகிறேன். சகோதர, சகோதரிகளே, முன்பு ரூ.350 என இருந்த LED பல்புகளின் விலை இப்போது புதிய உஜாலா  திட்டத்தின் கீழ் வெறும் ரூ.40 – 45 என்று குறைந்துவிட்டது. இது வரையில் நாடு முழுக்க அரசாங்கத்தால் 27 கோடிக்கும் அதிகமான LED பல்புகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. கர்நாடகாவிலும் சுமார் 1.75 கோடி பல்புகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. ஒரு பல்புக்கு நாம் ரூ.250 சேமித்ததாகக் கருதினாலும், நாட்டின் நடுத்தர வகுப்பு மக்கள் சுமார் ரூ.7000 கோடியைச் சேமித்திருக்கிறார்கள். சொல்லப்போனால், இந்த பல்புகள் ஒவ்வொரு வீட்டின் மின்சார பில்லிலும் சேமிப்பை ஏற்படுத்துகிறது. வீட்டில் LED பல்புகள் வைத்திருக்கும் எவரும், மின்சார பில் குறைந்திருப்பதை நிச்சயமாகக் காண முடியும். எனவே, மின்சாரப் பயன்பாடும் குறைந்துள்ளது. நடுத்தரக் குடும்பத்தினர் ஓராண்டுக் காலத்தில் ரூ.14,000 கோடி சேமித்திருக்கிறார்கள். இயல்பாகவே, LED பல்புகளின் உபயோகம் மின்சார உபயோகஅளவைக் குறைத்திருக்கிறது. அதாவது உற்பத்தித்திறனில் 7,000 மெகாவாட் மின்சாரம், குறைவாகத் தேவைப்படுகிறது. 7,000 மெகாவாட் திறனுள்ள ஒரு மின்உற்பத்தி நிலையம் நிறுவினால் குறைந்தபட்சம் 35 முதல் 40 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும். மின்சாரத்தைச் சேமித்த காரணத்தால் நாட்டுக்கு நாம் 35 – 40 ஆயிரம் கோடி ரூபாயை மிச்சப்படுத்திஇருக்கிறோம். ஒரு திட்டத்தின் அமலாக்க அணுகுமுறையை மாற்றியதால் இது சாத்தியமாகியுள்ளது. LED பல்புகள் வாங்கியதால் நடுத்தர மக்களுக்குக் கிடைத்த சேமிப்பும், மின்சார உபயோகம் குறைந்ததும் சுமார் 55 முதல் 60 ஆயிரம் கோடி ரூபாயை மிச்சப்படுத்திக்கொடுத்திருக்கிறது. நடுத்தர வகுப்பு மக்கள் இதனால் பயன்பெற்றிருக்கிறார்கள்.

     அரசின் முயற்சிகள் காரணமாக, LED பல்புகளுக்கு மாறும் உள்ளாட்சி அமைப்புகளும், நிதி அளவில் பயன் பெற்றுள்ளன. நான் பனாரஸ் எம்.பி. சுமார் 15 கோடி ரூபாயை பனாரஸ் மிச்சப்படுத்த நான் உதவியிருக்கிறேன். அந்தப் பணம் வேறு திட்டங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. இரண்டாம் நிலையில் உள்ள ஒரு நகரம் சுமார் 10 முதல் 15 கோடி ரூபாய் வரையில் சேமிக்க முடியும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

     இந்தப் பணம் எல்லாம் நகரில் வளர்ச்சிக்கு இப்போது செலவிடப்படலாம். அரசு முயற்சிகளின் காரணமாக வெளிநாடுகளில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் இறக்குமதி செய்வதால் ஏற்படும் செலவினமும் குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

     சகோதர, சகோதரிகளே, பெட்ரோல் மற்றும் டீசலுக்கு எதிர்காலம் கிடையாது. ஒருநாள் இந்த இயற்கைவளங்கள் தீர்ந்து போய்விடும். எதிர்காலம் சூரியச்சக்தி, காற்றாலைச் சக்தி மற்றும் நீர்மின் சக்திக்குத்தான் இருக்கிறது. நமது நாட்டில் இதை எளிதாகச் செய்துவிடலாம். ஏனென்றால், நாம் இயற்கையைப் பாதுகாத்தல் மற்றும் இயற்கையை வழிபடுதலில் நம்பிக்கை கொண்ட மக்கள். மரங்களைப் பாதுகாக்க நமது உயிரையும் தியாகம் செய்வது நமது பாரம்பரியத்தில் ஊறிவந்திருக்கிறது. மரத்தின் ஒரு கிளையை வெட்டுவதாக இருந்தாலும் அதற்காகப் பிரார்த்தனை செய்கிறோம். உயிரினங்களின் மீது அன்பும் கருணையும் காட்ட வேண்டும் என்று குழந்தைப் பருவத்தில் இருந்தே நமக்குக் கற்பிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஆரத்தி முடிந்ததும் நாம் – “वनस्पतय: शांति आप: शांति” (வனஸ்படயஹா சாந்தி ஆபாக சாந்தி) என்ற சாந்தி மந்திரத்தைச் சொல்கிறோம்.

     ஆனால், காலப்போக்கில் இந்தப் பாரம்பரியம் தேய்ந்துவிட்டது என்பதும் உண்மை. இன்றைக்கு இதுதொடர்பாகத் துறவிகள் தங்களது முயற்சியை அதிகரிக்க வேண்டியுள்ளது. நமது பாரம்பரியங்களில் எழுதிவைத்துள்ளவற்றை, நடைமுறைக்குக் கொண்டுவந்தால் தான், பருவநிலை மாற்றம் என்ற சவாலை எதிர்த்து நாம் போராட முடியும். நமது ரிக் வேதம் முழுக்க இதற்குத்தான் அர்ப்பணிக்கப் பட்டிருக்கிறது.

     சகோதர, சகோதரிகளே, உஜ்வாலா திட்டம் பற்றியும் உதாரணத்தைத் தெரிவிக்க நான் விரும்புகிறேன். இந்தத் திட்டம் மூலமாக 3 கோடிக்கும் மேற்பட்ட ஏழைப் பெண்களுக்கு இதுவரையில் அரசு எரிவாயு இணைப்புகளைக் கொடுத்திருக்கிறது. எரிவாயு இணைப்பு இல்லாத நிலையில், அந்தப் பெண்கள் விறகு அல்லது மண்ணெண்ணெய்யை நம்பி இருந்தனர். அரசு அவர்களின் வாழ்வை எளிதாக்கி இருப்பதுடன் மட்டுமன்றி பாதுகாப்பான சுற்றுச்சூழலையும் அளித்துள்ளது.

     கடந்த காலங்களில் நமது நாடு ஏராளமான மாற்றங்களைக் கண்டிருக்கிறது – தனிநபர்களிடம் மாற்றங்கள் மற்றும் சமூகத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த ஆண்டுகளில் சமூகத்தில் சில தீயனவும் ஊடுருவியுள்ளன. ஆனால், இதுபோன்ற தீமைகள் ஊடுருவும்போதெல்லாம் நமது சமூகத்தில் இருந்து யாராவது ஒருவர் முன்னெடுத்துச்சென்று அதை அழிக்கிறார் என்பதுதான் நமது சமூகத்தின் விசேஷமான அம்சம். சமூகத்தில் ஏற்படும் தீமைகளுக்கு எதிராக நமக்கு நல்லறிவைப் புகட்டுவதற்காக நமது துறவிகள் தங்களுடைய மொத்த வாழ்நாளையும் செலவழித்திருக்கிறார்கள். நமது நாட்டின் துறவிகளிடம் தலைமை இருந்த ஒரு காலம் உண்டு.

     தீமைகளைக் கண்டறிந்து வீடுபேற்றுக்கான வழியைக் காட்டக் கூடிய ஆதி சங்கராச்சாரியார், சந்த் வசவேஸ்வர் போன்ற பெரிய துறவிகள் அவ்வப்போது தோன்றினார்கள் என்பது நமது நாட்டின் தனித்துவமான அம்சமாகும்.

     நமது மதத்தின் கடவுளைப் பற்றி நாம் பேசும் தேவை வருகிறது; நாம் பாரதமாதா பற்றிப் பேச வேண்டும். எழுத்தறிவின்மை, அறியாமை, சத்துணவின்மை, கருப்புப் பணம், ஊழல் போன்ற தீமைகளின் பிடியில்இருந்து பாரத மாதாவை விடுவிக்க, துறவிகளும் ஆன்மிகச் சமுதாயமும் தங்களுடைய முயற்சிகளை அதிகரித்து நாட்டுக்கு வழிகாட்ட வேண்டும்.

     ஒவ்வொருவருடைய பங்கேற்புடனும் மற்றும் உறுதியான முயற்சிகளுடன் நம்மால் புதிய இந்தியாவை உருவாக்க முடியும். ஒவ்வொருவரின் உதவியுடனும்தான் ஒவ்வொருவரும் வளர்ச்சி காண முடியும்.

     சவுந்தரிய லஹரி உச்சாடனம் செய்ததற்காகவும், 10 ஆண்டு காலமாகத் தொடர்ச்சியாக ஆன்மிக நடைமுறையைப்  பின்பற்றுவதற்காகவும் உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நான் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 10 ஆண்டு காலமாக இந்தத் துறவுப் பணியில் ஈடுபட்டுள்ள ஆன்மிகத் தலைவர்களுக்கு நான் தலைவணங்குகிறேன். அதற்காக அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

     ஸ்ரீ ஸ்ரீ சங்கர் பாரதி மகாசுவாமி ஜி அவர்களுக்குத் தலைவணங்கி இங்கே எனது உரையை நான் நிறைவு செய்கிறேன்.

     இந்த நல்ல தருணத்தில் நான் இதில் பங்கேற்றிருப்பதைப் பெருமையாகக் கருதுவதை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன். இது எனக்கு ஆசிர்வதிக்கப்பட்ட ஒரு நல்ல தருணம். உங்கள் ஆசிகளை நாடி அன்னை பாரதியின் நற்பணிகள் சிலவற்றைத் தொடர்வதற்கு நான் விரும்புகிறேன்.

மிக்க நன்றி !!

 

*******