பி.எம்.இந்தியா
மேதகு டாக்டர் ஏஞ்சலா மெர்க்கெல் அவர்களே!
பெங்களூருவில் இந்நிகழ்ச்சியில் உங்களுடன் நான் கலந்து கொள்வது குறித்து பெரு மகிழ்ச்சி அடைகிறேன். இந்திய ஜெர்மன் உச்சி மாநாட்டில் நான் உங்களை வரவேற்கிறேன். சென்ற ஏப்ரல் மாதம் ஹானோவர், ஹானோவர் மெஸ்ஸி ஆகிய இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொண்டதை நினைவு கொள்கிறேன்.
அந்நிகழ்ச்சியில் இந்தியாவில் 15 மாநிலங்களில் இருந்து பல நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள். பொருள்களை தயாரிப்பதில் உள்ள உத்திகள் குறித்து ஹானோவர், மெஸ்ஸி நடந்த நிகழ்ச்சிகளின் மூலம் நமக்கு சிறந்த வழிகாட்டுதல் கிடைத்தன. உலகில் பொருள்கள் தயாரிக்கும் சிறந்த இடமாக இந்தியா திகழ்வதற்கு இந்த நிகழ்ச்சி மிகவும் முக்கியமாக இருந்தது.
டாக்டர் மெர்க்கெல் மற்றும் நண்பர்களே!
இந்தியா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு இடையே பொருளாதார கூட்டுறவு சிறந்த முறையில் உள்ளது. இந்தியாவில் முதலீடு செய்யும் நாடுகளில் ஜெர்மனி 7வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் தற்போது 600க்கும் மேற்பட்ட இந்திய ஜெர்மனி கூட்டுறவிலான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆயினும் தற்போது இரு நாடுகளுக்கு இடையே நிலவும் வர்த்தக கூட்டுறவின் மூலம் இது குறைவானதே ஆகும். ஜெர்மனி எந்த பிரிவுகளில் வலுவாக உள்ளதோ அப்பிரிவுகளை மேலும் மேம்படுத்த நாங்கள் தயாராக உள்ளோம். இதற்காக தகுந்த சூழ்நிலையை நாங்கள் உருவாக்க கடினமான முறையில் பணி செய்து வருகிறோம்.
நண்பர்களே! உலகில் பல நாடுகளில் பொருளாதார மந்த நிலை காணப்படும் இச்சமயத்தில் இந்தியா முதலீடுகளுக்கு உகந்த நாடாக தற்போது விளங்குகிறது. நாம் சரியான பாதையில் செல்வது என்பது மிகவும் அதிர்ஷ்டமானது. அண்மையில் உலக அளவில் கிடைத்த புள்ளி விவரங்களின்படி இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆயினும், நாம் மெத்தனமாக இருக்க முடியாது. இதை நடைமுறைப்படுத்த நாம் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ள வேண்டும்.
உலகில் தற்போதுள்ள நிலையைக் கருத்தில் கொண்டு பார்த்தால் கடந்த 15 மாதங்களில் இந்தியாவில் எளிதான முறையில் வர்த்தகத்தை நடத்த நாங்கள் தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இந்தியாவில் உள்ள சாதாரண மக்களின் வாழ்க்கைத்தரம் உயர வேண்டுமானால் வர்த்தகமும், தொழில்துறையும் சிறந்த முறையில் செயல்பட சாதகமான சூழ்நிலை நிலவ வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். உலக வங்கிக் குழுமம் அண்மையில் மேற்கொண்ட ஆய்வின்படி மாநில அரசுகள் வர்த்தகத்தை எளிதாக்கும் வகையில் செயல்படுவது அவசியம் என்று கூறியுள்ளது. மாநிலங்களும் மத்திய அரசுடன் இணைந்து கூட்டுறவு மற்றும் போட்டியிடக்கூடிய அடிப்படையில் தற்போது செயல்பட்டு வருகின்றன. மாநில அரசுகளும் தற்போது ஒருவருக்கொருவர் ஆரோக்கியமான முறையில் வர்த்தகத்தில் போட்டியிடுகின்றன. இதன்மூலம் வெளிப்படையான மற்றும் வர்த்தகத்தை நடத்துபவர்களுக்கு சாதகமான முறையில் விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன.
நண்பர்களே! இன்று இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட வேண்டியது என்பது இந்தியா எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் ஆகும். இந்த சவாலை எதிர்கொள்ள வேண்டுமெனில் பொருள்களை தயாரிப்பை மேலும் ஊக்குவிக்க வேண்டும். தற்போது பல ஆண்டுகளாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது 16% அளவே உள்ளது. குறுகிய மற்றும் நடுத்தர காலகட்டத்தில் இது சுமார் 25 சதவீதமாக உயர வேண்டும். ஆகவே தான் நாங்கள் “இந்தியாவில் தயாரிப்போம்” என்ற திட்டத்தை துவக்கினோம்.
இத்திட்டம் வெற்றிபெற பல நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறோம். வர்த்தகம் புரிவதை எளிதாக்க தொழில்துறை மற்றும் கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கு தேவையான அனுமதிகளை நாங்கள் விரைவாக அளித்து வருகிறோம். அலைக்கற்றை, நிலக்கரி, இரும்புத் தாது மற்றும் பிற இயற்கை கனிமங்கள் ஆகியவற்றை கடந்த 15 மாதங்களில் வெளிப்படையான முறையில் ஏலம் நடத்தி அவற்றை முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கியுள்ளோம்.
உள்நாட்டு நிதி ஆதாரங்கள் எங்கள் தேவைகளை நிறைவேற்றாது என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். வெளிநாட்டு முதலீடுகள் மிக அதிக அளவில் தேவையாக உள்ளது. வெளிநாட்டு முதலீடுகளை பெறுவதற்காக ரயில்வேயில் 100% அளவிற்கும், பாதுகாப்பு மற்றும் காப்பீட்டு பிரிவுகளில் 49% வரைக்கும் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை உயர்த்தியுள்ளோம். கட்டுமானம் மற்றும் மருத்துவ சாதனங்கள் பிரிவில் அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையை நாங்கள் சீரமைத்து உள்ளோம். மற்றப் பிரிவுகளிலும் அந்நிய நேரடி முதலீடு குறித்த பிரச்சினைகளுக்கு நாங்கள் தீர்வு கண்டுள்ளோம். அவற்றிற்கு தேவையான வெளிநாட்டு கொள்கைகளில் தேவையான மாற்றங்களை முதலீட்டாளர்களுக்கு சாதகமான வகையில் ஏற்படுத்தி வருகிறோம்.
நமது சமூகத்திற்கு எதிர்காலத்திற்கு தேவையான கட்டமைப்பு வசதிகளையும் உருவாக்க நாங்கள் ஆர்வம் கொண்டுள்ளோம். எங்களது நிதி ஆதாரங்களை தேவையானபடி நிர்வகித்து கட்டமைப்புப் பிரிவில் மேலும் அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம். இந்திய முதலீடு மற்றும் கட்டமைப்பு நிதியம் ஒன்றையும் அமைத்துள்ளோம். ஆண்டு ஒன்றுக்கு ரூ.20,000 கோடி ரூபாய் அளவுக்கு (ஏறத்தாழ 2.7 பில்லியன் யூரோக்கள் ஆகும்) எங்களது சொந்த நிதி ஆதாரங்களின் மூலம் திரட்ட உள்ளோம். இந்த நிதியத்தை நிர்வகிக்க குழு ஒன்றையும் அமைத்துள்ளோம்.
ரயில், சாலை மற்றும் பாசன வசதி ஆகிய பிரிவுகளில் திட்டங்களை மேற்கொள்ள வரிகள் இல்லாத கட்டமைப்பு பத்திரங்களை வெளியிட உள்ளோம்.
வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வரி விதிப்பிலும், விதிமுறைகளிலும் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்றும், அவை அவர்களை பாதிக்கின்றன என்றும் நினைக்கின்றனர். இதுபோன்ற முதலீட்டாளர்களின் கவலைகளை தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகிறோம்.
இதற்கு சில உதாரணங்களை கூறலாம்:
• சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு குறித்த அனுமதிக்கு தேவையான நடைமுறைகள் துரிதப்படுத்தப்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
• தொழிற்துறை உரிமங்களின் கால வரம்பு நீட்டிக்கப்பட்டுள்ளது;
• பாதுகாப்பு சாதனங்களை உற்பத்தி செய்ய பல பொருள்களுக்கு உரிமங்கள் விலக்கப்பட்டுள்ளன.
• பாதுகாப்புத் தொழில்துறை உரிமங்களுக்கு தற்போதுள்ள மூன்று ஆண்டு என்ற கால அளவு பதினெட்டு ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது;
• குறைந்த பட்ச மாற்று வரியை எப்.பி.ஐ.களுக்கு விதிக்கமாட்டோம் என்றும் வரிகள் முன்தேதியிட்டு விதிக்கப்பட மாட்டாது என்றும் ஏற்கனவே நாங்கள் உறுதியளித்துள்ளோம்;
• வெளிநாட்டு முதலீடுகளை, மாற்று முதலீட்டு நிதியங்களில் முதலீடு செய்ய தேவையான நடைமுறைகளை நாங்கள் அறிவித்துள்ளோம்;
• ரியல் எஸ்டேட் முதலீட்டு நிறுவனங்களில் கிடைக்கும் முதலீட்டு இலாபத்திற்கான வரி திருத்தி அமைத்துள்ளோம். மேலும், நிரந்தர நிறுவனங்களுக்கான விதிமுறைகளை மாற்றி அமைத்துள்ளோம்;
• வரிகளை தவிர்க்கும் புது விதிகளை செயல்படுத்தும் முறையை இரண்டு ஆண்டுகளுக்கு நாங்கள் ஒத்திவைத்துள்ளோம்;
• நாடாளுமன்றத்தில் சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளோம். 2016 ஆம் ஆண்டு இது நடைமுறைப்படுத்தப்படும் என்று நம்புகிறோம்;
• நிறுவனங்கள் திவாலாகும் நிலைமை குறித்து புதிய விதிமுறைகளை நாங்கள் உருவாக்கி வருகிறோம். நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயம் வெகுவிரைவில் அமைக்கப்படும்.
எங்களது வரிவிதிப்பு முறை வெளிப்படையாக இருக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். நியாயமான முதலீட்டாளர்களுக்கும் வரிகளை நேர்மையாக செலுத்துபவர்களுக்கும் வரி விஷயத்தில் விரைவான மற்றும் நியாயமான முடிவுகள் அளிக்கப்படும்.
இதுபோன்ற முயற்சிகளால், தனியார் முதலீடுகளும் அந்நிய முதலீடுகளும் அதிகரித்துள்ளன. எங்களது வளர்ச்சி விகிதம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7%க்கும் மேல் உள்ளது. அந்நிய நேரடி முதலீடு கடந்த ஆண்டைக் காட்டிலும் 40% வரை அதிகரித்துள்ளது.
உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், வர்த்தக கூட்டுறவு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் போன்ற நிதி நிறுவனங்கள் வரும் ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி விரைவாக இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளன. இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை “மூடீஸ்” அமைப்பும் உயர்த்தி உள்ளது.
முதலீடுகளை பொறுத்தவரை ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்தக மற்றும் மேம்பாட்டு அமைப்பும் தர வரிசையை உயர்த்தியுள்ளது. இதுவரை 15வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 9 இடத்திற்கு வந்துள்ளது. உலகப் பொருளாதார அமைப்பின் தர வரிசையிலும் இந்தியா 16 இடங்களுக்கு மேல் முன்னேறியுள்ளது. 5 ஆண்டுகளாக இது குறைந்து இருந்தது. இதுபோலவே பசுமைத் திட்டங்களுக்கான முதலீடுகளை 2015ஆம் ஆண்டின் முதல் பகுதியில் உலகிலேயே இந்தியா முதலிடத்தை பெற்றுள்ளது. அமெரிக்காவில் உள்ள வெளி நாட்டு கொள்கைகளுக்கான பத்திரிகை அந்நிய நேரடி முதலீடுகளில் இந்தியா முதலிடத்தை பெற்றுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.
கடந்த பதினைந்து மாதங்களில் வெளிநாட்டு நிறுவனங்களின் பார்வையில் இந்தியாவின் மேல் உள்ள நம்பிக்கை மேம்பட்டுள்ளது.
வர்த்தகத்தில் ஈடுபடுவது அரசின் பணியல்ல என்று எப்போதும் நான் கூறி வந்துள்ளேன். சில பிரிவுகளில் அரசு மட்டுமே முதலீடு செய்து வந்த நிலை மாறி, அரசும், தனியாரும் இணைந்து அல்லது பிற வகைகளில் இணைந்து தனியார் முதலீடுகளுக்கு நாங்கள் ஊக்கமளிக்கிறோம். பொதுத்துறை நிறுவனங்களில் எங்கள் பங்குகளையும் விற்று இந்த சந்தையில் கட்டுப்பாட்டை கொண்டு வருகிறோம்.
நண்பர்களே! தொழில் முனைவோர் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை அளிப்போர் ஆகியோரை பாதுகாக்க அறிவுசார் சொத்துரிமையை இந்தியா அளிக்கும் என்று நான் உறுதி கூறுகிறேன். ஐ.பி. நிர்வாகத்திலும், ஆன்லைன் முறையிலும் வெளிப்படையான தன்மையை அளிக்க பல்வேறு முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். தேசிய அளவில் அறிவுசார் சொத்துரிமையை கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. சென்ற வாரம் இந்த நிலைமை குறித்து நானே ஆய்வு செய்தேன். இது முன்னேற்றமான மற்றும் முற்போக்கான கொள்கை என்று நான் கூறுகிறேன்.
நண்பர்களே! எங்கள் கனவுகளை நாங்கள் நனவாக்க உங்கள் பங்களிப்பு மிகவும் அவசியமாகும். எங்கள் இலக்குகளை விரைவாகவும், திறமையாகவும் அடைய ஜெர்மனி நாட்டு நிறுவனங்களுக்கு சிறந்த வாய்ப்புகளை நாம் அளிக்கிறோம். 50 மில்லியன் வீடுகளை கட்டுவது முதல் 100 நவீன நகரங்களை அளிப்பது வரை வாய்ப்புகள் உள்ளன; ரயில்வே இணைப்புகள் மற்றும் புதிய ரயில்வே நிலையங்களை நவீனப்படுத்துதல் என்பது முதல் கட்டமைப்பு வசதிகளை அளிப்பது வரை; 175 ஜிகா வாட் அளவிற்கு புதுப்பிக்கக்கூடிய எரிசக்தியை உற்பத்தி செய்வது முதல் அவற்றின் பரிமாற்றம் மற்றும் விநியோகம் ஆகியவற்றை உறுதி செய்தல்; தேசிய நெடுஞ்சாலைகள், பாலங்கள், மற்றும் மெட்ரோ ரயில் ஆகியவை. இதுபோன்ற பெரிய அளவிலான உற்பத்தி மற்றும் கட்டமைப்பு வசதியை உருவாக்குவது ஆகியவை எந்த ஒரு நாட்டிலும் இருக்காது. இதுபோன்ற பெரிய அளவிலான திட்டங்களை உலகில் எந்த நாடும் அளிக்க இயலாது.
டிஜிட்டல் இந்தியா மற்றும் திறன் இந்தியா ஆகிய இயக்கங்கள் மூலம் இந்த சக்தியை நாங்கள் பெறுவோம். எங்களது ஆற்றலை முழுவதுமாக வெளிப்படுத்த இந்தியாவில் நிறுவனங்களை அமைக்கும் இயக்கத்தையும் துவக்கி உள்ளோம்.
எங்களது பயணத்தில் நாஸ்காமும் இணைந்து செயல்படுவது குறித்து நான் நன்றி தெரிவிக்கிறேன். அண்மையில், சிலிக்கான் பள்ளத்தாக்கில் அங்குள்ள இளைஞர்களுடன் உரையாடி இந்த ஆற்றலை வெளிக்கொணர முயன்றேன். தகவல் தொழில் நுட்ப புரட்சியில் இந்தியா சிறந்து விளங்குகிறது. 125 கோடி மக்களின் விருப்பங்களை இந்த தொழில்நுட்பம் நிறைவேற்றும் வகையில் நமக்கு இது அமைந்துள்ளது. நவீன தொழில்நுட்பம் மற்றும் மனித வள ஆற்றல் ஆகியவற்றில் மூலதனங்களை இந்த முயற்சிகள் அளிக்கும்.
நண்பர்களே! நமது நாடு இளமையானது. இன்னும் பல ஆண்டுகளுக்கு இப்படியே இருக்கும். இந்தியாவின் உள்நாட்டு சந்தை மிகப் பெரிய அளவிலானது. பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப்போல அல்லாமல், இந்தியாவில் திறமை வாய்ந்த இளைஞர்கள் அதிக ஊதியம் பெறும் பணிகளை மட்டும் எதிர்பார்ப்பதில்லை. மாறாக, இடர்கள் இருந்தாலும் அவர்கள் தொழில் முனைவோர்களாக மாற நினைக்கிறார்கள். கடந்த ஆண்டுகளில் புதிய தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை நாம் கண்டுள்ளோம். அதில் சில நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சவாலாகவே விளங்கத் துவங்கியுள்ளன.
முடிவாக, உங்களது கருத்துக்கள், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில் முனைவு ஆகியவற்றை நான் வரவேற்கிறேன். ஹானோவரில் நான் கூறியதை நான் இங்கு மீண்டும் தெரிவிக்கிறேன். எங்களது கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் ஆகியவற்றில் தேவையான திருத்தங்களை கொண்டுவருவோம். திறமை, தொழில்நுட்பம் மற்றும் முதலீடுகள் ஆகியவற்றை வெளியில் இருந்து கொண்டு வருவதற்கு முன்பு இல்லாத வகையில் இந்தியா எப்போதும் தயாராக உள்ளது என்பதை நான் தெரிவிக்கிறேன்.
இந்திய பொருளாதாரம் மிகச் சிறந்த வகையில் வளர்ச்சியடைய தேவையான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. உங்கள் நாட்டின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம்.
பெங்களூருவில் இருக்கும் போது நான் கூறுகிறேன்: இந்தியாவின் மென்பொருள் உலகில் வன்பொருளை இயக்கும்; திறன்மிகு இந்தியா தொழில்நுட்பத்தை கற்றுத் தேறும்; இந்தியாவில் உள்ள சந்தை உற்பத்தியை ஊக்குவிக்கும்.
ஆகவே இந்தியாவில் இருந்து வர்த்தகம் புரிவது விவேகமானதாக அமையும். இந்தியாவில் பொருள்கள் உற்பத்தி செய்யும்போது வர்த்தக விவேகம் சிறப்பானதாகும்.
மிக்க நன்றி!
PM @narendramodi begins his speech by recalling India's participation at the @hannover_messe earlier this year. https://t.co/l9wzvMgprS
— PMO India (@PMOIndia) October 6, 2015
There is tremendous potential in India-Germany economic collaboration: PM @narendramodi https://t.co/l9wzvMgprS
— PMO India (@PMOIndia) October 6, 2015
At a time of global slowdown, India represents a bright spot for investments: PM @narendramodi https://t.co/l9wzvMgprS
— PMO India (@PMOIndia) October 6, 2015
We are committed to creating favourable conditions for business and industry: PM @narendramodi https://t.co/l9wzvMgprS
— PMO India (@PMOIndia) October 6, 2015
We have fast tracked approvals and clearances for industry and infrastructure: PM @narendramodi https://t.co/l9wzvMgprS
— PMO India (@PMOIndia) October 6, 2015
We have taken very decisive steps to remove a number of long pending concerns of investors: PM @narendramodi https://t.co/l9wzvMgprS
— PMO India (@PMOIndia) October 6, 2015
We have expedited regulatory clearances including security and environmental clearance: PM @narendramodi https://t.co/l9wzvMgprS
— PMO India (@PMOIndia) October 6, 2015
Across the board we have increased the validity period of Industrial Licences: PM @narendramodi https://t.co/l9wzvMgprS
— PMO India (@PMOIndia) October 6, 2015
We have introduced the GST Bill in parliament; we are hopeful to roll it out in 2016: PM @narendramodi https://t.co/l9wzvMgprS
— PMO India (@PMOIndia) October 6, 2015
Such a huge potential for creation and production will not be available in any one country: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 6, 2015
The Business Forum organised by @nasscom & Frauenhofer Institute illustrated the strong potential in India-Germany economic collaboration.
— Narendra Modi (@narendramodi) October 6, 2015
I spoke at length on how India has emerged as a bright spot for investments, even at a time of a global slowdown. http://t.co/5LDMA4ImRF
— Narendra Modi (@narendramodi) October 6, 2015
India's software will move hardware across the world. India's talent will master technology & our market will motivate manufacturing.
— Narendra Modi (@narendramodi) October 6, 2015
I laud Chancellor Merkel for her vision where German engineering & Indian IT fuse to create world class products.
— NarendraModi(@narendramodi) October 6, 2015
Witnessing the various technological innovations at Bosch. pic.twitter.com/s5sx61O4ce
— NarendraModi(@narendramodi) October 6, 2015
As she leaves India, gratitude to Chancellor Merkel. This has been a productive visit, which has taken India-Germany ties to newer heights.
— NarendraModi(@narendramodi) October 6, 2015