Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பெரும் துறைமுகங்களில் சரக்கமைய திட்டங்களை செயல்படுத்தி வரும் துபாய் போர்ட் வேர்ல்ட் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு மாற்ற திட்டத்திற்கு தடையில்லை


பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை இந்தியாவின் பெரும் துறைமுகங்களில் சரக்கு மையத் திட்டங்களை மேற்கொண்டு வரும் துபாய் போர்ட் வேர்ல்ட் லிமிடெட் நிறுவனம் முன்வைத்துள்ள பங்கு மாற்றத் திட்டத்திற்கு தடையில்லை என்ற சான்றிதழை வழங்குவதற்கான அனுமதியை இன்று வழங்கியது. இதன் மூலம் துபாய் போர்ட் வேர்ல்ட் லிமிடெட் நிறுவனம் இந்திய நிறுவனம் ஒன்றை ஒரு சில குறிப்பிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளின் அடிப்படையில் தற்போது பெரும் துறைமுகங்களில் அது மேற்கொண்டு வரும் சரக்கக மையங்களை நடத்துவது, நிர்வகிப்பது ஆகிய பணிகளை மேற்கொள்ளும் வகையில் இந்திய நிறுவனம் ஒன்றை பிரத்யேகமான சொத்து நிர்வாகத்துடன் உருவாக்கிக் கொள்ள அனுமதிப்பதாக இது அமைகிறது.

இந்த முடிவானது துறைமுகத் துறையில் நேரடி அந்நிய முதலீடுக்கும் தனியார் துறை பங்கேற்பிற்கும் வழிவகுப்பதாக அமையும்.

துபாய் போர்ட் வேர்ல்ட் லிமிடெட் நிறுவனமானது இந்தியாவில் உள்ள தனது துறைமுக கட்டமைப்புகளின் உரிமையை வலுப்படுத்தும் வகையில் இந்தியாவில் உள்ள தனது சொத்துக்களை ஒரே நிறுவனத்தின் கீழ், அதாவது ஹிந்துஸ்தான் போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் கீழ், கொண்டு வர திட்டமிட்டிருந்தது. இந்த புதிய நிறுவனமானது இந்தியாவில் சலுகை ஒப்பந்தங்களை பெற்றுள்ள துபாய் போர்ட் வேர்ல்ட் லிமிடெட் நிறுவனத்தின் தற்போதைய துணை நிறுவனங்களின் அனைத்து பொறுப்புகளையும் ஏற்றுக் கொள்ளும். இந்த நடவடிக்கைகளின் மூலம் இறுதியாக பலன் பெறுபவர் மற்றும் இறுதியாக சட்டபூர்வமாக பயன் அடைபவர் என்பது துபாய் போர்ட் வேர்ல்ட் லிமிடெட் நிறுவனமாகவே இருக்கும். அதில் எவ்வித மாற்றமும் இருக்காது. துபாய் போர்ட் வேர்ல்ட் லிமிடெட் நிறுவனத்தின் இந்த வேண்டுகோளை அந்நிய மூலதன வளர்ச்சிக்கான வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். துபாய் போர்ட் வேர்ல்ட் லிமிடெட் நிறுவனத்தின் இந்த முன்வரைவு என்பது இந்தியாவில் உள்ள அதன் துறைமுக மற்றும் இதர வசதிகளுக்கான கட்டமைப்பிற்கு புதிய முதலீடுகளை கொண்டு வரவும், அதன் மூலதன அடித்தளத்தை விரிவுபடுத்தவும் உதவும். மேலும் இந்த ஏற்படானது நிதிவசதிகளை திறமையாகப் பயன்படுத்திக் கொள்ளவும் அதன் துறைமுக நடவடிக்கைகளில் நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தவும் உதவும்.

இந்த புதிய நிறுவனமான ஹிந்துஸ்தான் போர்ட்ஸ் ப்ரைவேட் லிமிடெட் தனது தாய் நிறுவனமான துபாய் போர்ட் வேர்ல்ட் லிமிடெட் இந்தியாவில் பெற்றுள்ள சிறப்பு நோக்கங்கொண்ட திட்டங்களின் பங்குகளை வாங்கிய பிறகு அதன் நிகர மதிப்பு என்பது 80 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் இருக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு உட்பட்ட வகையில் துபாய் போர்ட் வேர்ல்ட் லிமிடெட் இந்தியாவில் தனது செயல்பாட்டை மறுசீரமைப்பதற்கான இந்த முன்வரைவை அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

துபாய் போர்ட் வேர்ல்ட் லிமிடெட் நிறுவனம் இந்தியாவில் உள்ள தனது சொத்துக்களை மறுசீரமைக்கும் இந்த முயற்சியானது சிறந்த ஒருங்கிணைப்பு மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றுக்கு உதவும் என்பதோடு, இந்திய துறைமுக நிர்வாகங்களும் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட ஒரே ஒரு நிறுவனத்துடன் தொடர்பு வைத்துக் கொள்ளும் வசதியைப் பெறும். துபாய் போர்ட் வேர்ல்ட் லிமிடெட் நிறுவனத்தின் இந்த முன்வரைவிற்கு அனுமதி அளித்ததானது நாட்டிற்குள் நேரடி அந்நிய முதலீடு அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் என்பதோடு துறைமுகத் துறையில் நிலவும் முதலீட்டாளர்கள் மீதான நட்புறவான சூழ்நிலையை எடுத்துக் கூறுவதாகவும் அமையும். இது மேலும் அதிகமான வெளிப்படைத் தன்மைக்கும் இந்திய சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் ஆகியவற்றை சிறப்பாக கடைப்பிடிக்கவும் வழிவகுக்கும்.