பி.எம்.இந்தியா
பிரதம மந்திரி திரு.நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, பெரு நாட்டுடன் பொருட்கள், சேவைகள் மற்றும் முதலீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஒப்புதல் அளித்துள்ளது.
பெரு நாட்டுடன் வணிக உடன்படிக்கை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக இந்தியா மற்றும் பெரு இடையே கூட்டு ஆய்வுக் குழு 2015, ஜனவரி 15 அன்று அமைக்கப்பட்டது. இரு தரப்பும் கூட்டு ஆய்வுக் குழு அறிக்கையை 2016, அக்டோபர் 20 அன்று இறுதி செய்ததுடன், சேவைகள் மற்றும் முதலீடு குறித்து பேச்சுவார்த்தையை முன்னெடுத்த செல்லவும் ஒப்புக் கொண்டுள்ளன.
பின்னணி:
லத்தீன் அமெரிக்கா மற்றும் கரிபியன் (எல்.ஏ.சி.) பிராந்தியத்தில் 2015-16-ம் ஆண்டு பெரு, இந்தியாவின் 3வது ஏற்றுமதிக்கான இடத்தை பிடித்துள்ளது. இந்தியா பெரு ஆகிய இருநாடுகளுக்கிடையே 2005-06-ம் ஆடு 107.32 மில்லியன் டாலர் மதிப்பில் இருந்த வணிகம், 2015-16ம் ஆண்டு 1319.45% உயர்வை கண்டுள்ளது. இருநாடுகளுக்கிடையேயான வணிகம், 2015-16-ம் ஆண்டு, ஏற்றுமதியில் 703.12 மில்லியன் அமெரிக்க டாலராகவும், இறக்குமதியில் 820.22 மில்லியன் அமெரிக்க டாலராகவும், மொத்தம் 1,523.35 மில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.
இந்தியா பெருவுடன் நட்புறவை கொண்டுள்ளது. உலகளவில், பெரு இந்தியாவுடன் ஒத்துழைத்து வரும் நிலையில், இரு நாடுகளிடையேயான வணிகம் மற்றும் பொருளாதார உறவுகளை வணிக உடன்படிக்கை அதிகரிக்கும். இந்த வணிக உடன்படிக்கை இந்தியா-பெரு உறவுகளில் முக்கிய முத்திரையாக விளங்குவதுடன், இந்தியா மற்றும் எல்.ஏ.சி. நாடுகளுக்கிடையேயான பாரம்பரிய சார்ந்த உறவை வலுவாக்கும்.