Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பெல்ஜியம் நாட்டுடன் இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு மற்றும் வரி ஏய்ப்புத் தடுப்பு உடன்பாட்டு திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் புதுதில்லியில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பெல்ஜியம் நாட்டுடன் இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு மற்றும் வரி ஏய்ப்புத் தடுப்பு உடன்பாட்டு திருத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இரு நாடுகளுக்குமிடையே வரி தொடர்பான தகவல்கள் பரிமாற்றத்திற்கான தற்போதைய கட்டமைப்பை விரிவாக்குவதற்கு இந்தத் திருத்தம் உதவுகிறது. இதனால் வரி ஏய்ப்பு தடுக்கப்பட்டு வரித் தவிர்ப்பும் குறைக்கப்படுகிறது. தற்போதுள்ள ஒப்பந்தப்படியான பரஸ்பர வரிவசூல் உதவி முறையையும் இந்த ஒப்பந்தம் திருத்தி அமைக்கிறது.