Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பெல்மாண்ட் மன்ற செயலகத்தை ஆதரிக்கும் கூட்டு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.


பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை 2015 ஜனவரி முதல் 2017 டிசம்பர் வரை பெல்மாண்ட் மன்ற செயலகத்தை 40,000 யூரோ செலவில் ஆதரிக்கும் பிரெஞ்சு தேசிய ஆராய்ச்சி நிறுவனத்துடனான (ANR), கூட்டு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் 2017க்கு பிறகும் பெல்மாண்ட் மன்ற தலைமைச்செயலகத்திற்கு பொருளாதார ஆதரவு அளிக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

2009ல் உருவாக்கப்பட்ட பெல்மாண்ட் மன்றம் உலக சுற்றுச்சூழல் மாற்ற ஆராய்ச்சி மற்றும் சர்வதேச விஞ்ஞான கழகங்களில் பங்காற்றும் உலகின் உயர்மட்ட நிதி வழங்குவோர்களை உள்ளடக்கிய குழு. சர்வதேச சுற்றுச்சூழல் குறித்து கண்டறியவும், ஆராய்ச்சி செய்யவும் அருமையான வாய்ப்புகளை வழங்குவதோடு, இயற்கை, சமூக விஞ்ஞானிகள் மற்றும் சர்வதேச வளங்களை கூட்டாக பணியாற்ற வைத்து தீர்வுகளை வழங்குகிறது.

ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, ஐரோப்பிய ஆணையம், பிரெஞ்சு, ஜெர்மனி, ஜப்பான், நெதர்லாந்து, தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளோடு, பெல்மாண்ட் மன்றத்தில் இந்தியாவும் உறுப்பினராக இருக்கிறது. புவி அறிவியல் அமைச்சகம் (MoES) இந்தியாவை பெல்மாண்ட் மன்றத்தில் 2012ஆம் ஆண்டில் இருந்து பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறது.

பெல்மாண்ட் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தும் வகையில், சுழற்சி முறையில் உறுப்பினர்களால் பெல்மாண்ட் மன்ற செயலகம் நடத்தப்படுகிறது.. ஜனவரி 2015ல் இருந்து 2017 டிசம்பர் வரை பிரெஞ்சு அரசு நடத்தி வந்தது. இதற்கு ஆகும் செலவை பெல்மாண்ட் மன்ற உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

தாக்கம்:

மன்றத்தின் செயல்பாடுகளில் தொடர்ச்சியையும், பெல்மாண்ட் மன்ற நடவடிக்கைகள் சுமூகமாக நடக்கவும் இந்த ஒப்பந்தம் துணை புரியும். ஏற்கனவே நான்கு கூட்டு ஆராய்ச்சிகளில் இந்தியா பங்கேற்பதாலும், பெல்மாண்ட் மன்ற நடவடிக்கைகளை செயலகம் ஒருங்கிணைக்கும் என்பதாலும், இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்திய விஞ்ஞானிகள் சமூகம் பலன் பெறும்.

பின்னணி: