Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பேட்மின்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற பி.வி. சிந்து-விற்கு பிரதமர் வாழ்த்து


பேட்மின்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற பி.வி. சிந்து-விற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“உன்னத திறமை பெற்ற பி.வி. சிந்து, இந்தியாவிற்கு மீண்டும் ஒருமுறை பெருமை தேடித் தந்துள்ளார்! பேட்மின்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில், தங்கப்பதக்கம் வென்ற அவருக்கு எனது வாழ்த்துகள். பேரார்வமும், அர்ப்பணிப்பு உணர்வும் கொண்ட அவரது அயராத முயற்சியுடன் பேட்மின்டன் போட்டியில் அவர் காட்டும் ஆர்வம் பிறரை ஊக்குவிப்பதாக உள்ளது. பி.வி. சிந்துவின் வெற்றி பல தலைமுறைக்கும், விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதாக இருக்கும்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

உன்னத திறமை பெற்ற பி.வி. சிந்து, இந்தியாவிற்கு மீண்டும் ஒருமுறை பெருமை தேடித் தந்துள்ளார்!

பேட்மின்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில், தங்கப்பதக்கம் வென்ற அவருக்கு எனது வாழ்த்துகள். பேரார்வமும், அர்ப்பணிப்பு உணர்வும் கொண்ட அவரது அயராத முயற்சியுடன் பேட்மின்டன் போட்டியில் அவர் காட்டும் ஆர்வம் பிறரை ஊக்குவிப்பதாக உள்ளது.

பி.வி. சிந்துவின் வெற்றி பல தலைமுறைக்கும், விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதாக இருக்கும்.

விகீ/எம்எம்/க