Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பொதுத்துறை நிறுவனங்கள் தேர்வு வாரியம் 1987ம் ஆண்டு மார்ச் 3ம் தேதி தீர்மானத்தினை திருத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில், பொதுத்துறை நிறுவனங்கள் தேர்வு வாரியம் 1987ம் ஆண்டு மார்ச் 3ம் தேதி தீர்மானத்தினை திருத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. அந்த திருத்த முன்மொழிவு விவரம்:

(1) அரசு (மாநில) பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களை, உட்சாராத அபேட்சர்களாக 5 ஆண்டு காலத்திற்கு மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் நியமிக்கலாம்.

(2) பொதுத்துறை நிறுவனங்கள் தேர்வு வாரியத்தின் தலைவராக அல்லது உறுப்பினர்களாக தேர்வு செய்யப்படுபவர்கள் பதவி ஏற்கும் நாளில் இருந்து 3 ஆண்டுகள் அல்லது 65 வயது இதில் எது முதலில் வருகிறதோ அதுவரை பதவியில் இருக்கலாம்.

பின்னணி-

(1) பொதுத்துறை நிறுவனங்களில் மூத்த பணி நிலைகளில் மாநில பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் பொதுத்துறை நிறுவனங்களை சேர்ந்த விண்ணப்பதாரர்களை நியமிக்க கொள்கை முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனங்கள் தேர்வு வாரியம் சிறப்பாக செயல்பட மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்புக்கு முன்மொழியப்படுகிறது.

(2) பொதுத்துறை மத்திய நிறுவனங்களில் மூத்த பதவி நிலைகளுக்கு தனியார் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களை சேர்ந்தவர்களை நியமிக்க திருத்தம் வகை செய்கிறது. இதன் மூலம் இந்த பிரிவைச் சேர்ந்த திறமையானவர்கள் தெரிவு செய்வதற்கு கிடைப்பார்கள்.

(3) மத்திய பொதுத்துறை நிறுவனங்களுக்கு திறமையான ஆட்கள் மாநில மற்றும் தனியார் நிறுவனங்களில் இருந்து கிடைப்பார்கள். இதன் மூலம் மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் பலன் அடையும்.