Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

போதைப் பொருட்கள், உளவியல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய பொருட்களை சட்டவிரோதமாக கடத்துவது தொடர்பாக, இந்தியா-இந்தோனேஷியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல்.


பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், போதைப் பொருட்கள், உளவியல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய பொருட்களை சட்டவிரோதமாக கடத்துவதை தடுப்பது தொடர்பாக, இந்தியா-இந்தோனேஷியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டது.

போதைப் பொருட்கள் மற்றும் உளவியல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய பொருட்கள் கடத்தப்படுவதை எதிர்த்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை முறைப்படுத்த, இந்த ஒப்பந்தம் உதவும். இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் நாளிலிருந்து செயல்பாட்டுக்கு வருவதுடன், ஐந்தாண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும்.

இது போன்ற உடன்படிக்கைகள் / புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் / ஒப்பந்தங்களில் இந்தியா 37 நாடுகளுடன் கையெழுத்திட்டுள்ளது.