பி.எம்.இந்தியா
போபாலில் காந்திநகர் என்ற இடத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 106.76 ஏக்கர் பரப்புள்ள இந்திய விமான நிலைய ஆணையத்தின் நிலத்தை மத்தியப் பிரதேச அரசுக்கு ஒப்படைப்பதற்கான இந்திய விமான நிலைய ஆணைய யோசனையை பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஏற்றுக் கொண்டுள்ளது.
இதற்கு ஈடாக ஏற்கனவே 96.56 ஏக்கர் நிலம் மத்தியப் பிரதேச அரசால் இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு ஒப்படைக்கப்பட்டு உள்ளது. எஞ்சிய 10.20 ஏக்கர் (தோராயமாக) நிலம் மத்தியப் பிரதேச அரசால் இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு ஒப்படைக்கப்படும்.
*****